திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை சந்தியில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவளார்களின் விளம்பர பலகை ஒன்று இனந்தெரியாதவர்களால் நேற்று இரவு கிழிக்கப்பட்டுள்ளதாக குறித்த இடத்திற்கு பொறுப்பான பத்தனை பொலிஸ் நிலையத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு கிழிக்கப்பட்ட விளம்பர பலகையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், மற்றும் ஆதரவாளர்களினதும் உருவப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

எனவே இது தொடர்பில் விஷமிகளை கண்டறியும் நடவடிக்கையை பொலிஸார் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.