LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு நாமங்களின் தரப்படுத்தலில் முதலாவது இடத்தைப் பிடித்த மஞ்சி பிஸ்கட்

03 Jun, 2024 | 05:13 PM
image

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடட் (CBL)) நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமமான மஞ்சி, 2024ஆம் ஆண்டுக்கான LMD இன் வருடாந்த வர்த்தக நாம தரப்படுத்தலில் ‘மிகவும் விரும்பப்படும் உற்பத்தி நாமமாக’ மீண்டும் ஒருமுறை வெற்றிபெற்றுள்ளது. 'மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு வர்த்தக நாமங்கள்” பிரிவில் மதிப்புமிக்க முதலாவது இடத்தைப் பெற்று, இலங்கையின் பெருமை மற்றும் சிறப்பின் அடையாளமாக மஞ்சி தனது நிலையை மீண்டும்  உறுதிப்படுத்தியுள்ளது.

உலகின் சுவைகளைஇலங்கையின் பாரம்பரியமான  சுவையுணர்வுடன் சிறப்பான முறையில் கலந்து,  சுவையரும்புகளுக்கு இன்பமளிக்கும் வகையில் தொடர்ச்சியாக வழங்கி நுகர்வோரை மகிழ்விப்பதில் மஞ்சி ஆரம்பம் முதலே அர்ப்பணிப்புடன் உள்ளது. LMD இடமிருந்து கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் நாடு முழுவதும் உள்ள நுகர்வோரிடமிருந்து இந்த வர்த்தகநாமம் சம்பாதித்திருக்கும் நீடித்த அன்பு மற்றும் நம்பிக்கையை கோடிட்டுக் காட்டுகின்றது. மஞ்சி உலகில் 69 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், உலகளாவிய ரீதியிலான அணுகல் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தரம் தொடர்பில் அது கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு இது சான்றாக அமைகின்றது. மஞ்சியின் உலகப் பிரசன்னமானது ஏற்றுமதி என்பதற்கு அப்பால், கானா, பங்களாதேஷ் போன்ற முக்கியமான இடங்களில் தயாரிப்பின் அடித்தளத்தை உருவாக்கி பரந்துபட்ட நுகர்வோர் தளத்துக்கான செயல்திறன் மற்றும் அணுகலை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடட் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் திரு.ரசித் விக்ரமசிங்க குறிப்பிடுகையில், “இலங்கையில் LMD இனால் ‘மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமம்’ தரப்படுத்தலில் முதலாவது இடம் என்ற அங்கீகாரத்தை மஞ்சி பெற்றுக்கொண்டமை குறித்து நாம் பெருமையடைகின்றோம். சிறப்பு மற்றும் எமது விசுவாசமான வாடிக்கையாளர்களுடன் ஆழமான தொடர்புகளைப் பேணுவதில் நாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சான்றாக இந்தப் பாராட்டு அமைகின்றது. எமது இந்தப் பயணத்தை நாம் தொடரும்போது, உயர்ந்த தரம் மற்றும் புத்தாக்கம் என்பவை குறித்து நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்போம்” என்றார்.

வாழ்க்கையை செழுமைப்படுத்துவதற்கும் சமூகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்படும் மஞ்சி, இலங்கையின் முன்னேற்றம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் கலங்கரை விளக்கமாக மாற்றுவதற்கு பிஸ்கட் உற்பத்தியாளர் மாத்திரமன்றி, சமூகத்தை செழிப்பூட்டும் செயற்பாடு மற்றும் அதன் வெற்றிக்கான கலங்கரை விளக்கமாகக் காணப்படுகின்றது. மஞ்சியின் பண்பாடு ஓர் அழமான நோக்கத்தைக் கொண்டுள்ளது: மக்களுக்காக தரமான வாழ்க்கையை மேம்படுத்தல் என்பதே அதுவாகும். கலை மற்றும் கலாசாரங்களை ஊக்குவித்தல், விளையாட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவுதல், கல்வி முன்னேற்றம், இளைஞர் யுவதிகளின் முன்னேற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் வேறு பல முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம்  மஞ்சி அனைத்து சமூகத்தினதும் நல்வாழ்வை மேம்படுத்துகின்றது. பொறுப்புமிக்க பெருநிறுவனக் குடிமகன் என்ற ரீதியில் சமூக முன்னேற்றம் மற்றும் நிலைபேறு தன்மை ஆகியவற்றில் மஞ்சியின் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கின்றது.

சமூகத்துக்குச் சேவையாற்றுதற்கான இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புப் போன்ற உணர்ச்சிமிக்க பல கதைகள் மஞ்சியின் பயணத்தில் அங்கமாக அமைந்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு மதியநேர உணவாக புரத பிஸ்கட்டுக்களை வழங்குவது என்ற பணிவான முயற்சியின் ஊடாக இது ஆரம்பமாகின்றது. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நுகர்வோர் மீது அக்கறை செலுத்தல், அவர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவது என்பன கம்பனியின் நோக்கமாகவுள்ளது.

மஞ்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் கருணாரத்ன குறிப்பிடுகையில், “இந்த மதிப்புக்குரிய நிலையை அடைவதற்கு அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்துடன் செயற்பட்ட முழு மஞ்சியின் குடும்பத்தின் கூட்டு முயற்சிக்கு சான்றாக இந்த அங்கீகாரம் அமைந்துள்ளது. நுகர்வோர் எமக்கு அளித்துள்ள நம்பிக்கை மற்றும் பாசத்தால் நாங்கள் கௌரவிக்கப்படுகிறோம், மேலும் இலங்கையின் விருந்தோம்பலின் சாரத்தை பிரதிபலிக்கும் புதுமையான தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களால் அவர்களை தொடர்ந்து மகிழ்விப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

100PLUS ஐசோடோனிக் பானம் இலங்கையில் அறிமுகம்

2024-07-18 01:32:47
news-image

ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஊக்குவிக்க ஐ.சி.சி.யுடன்...

2024-07-17 12:55:38
news-image

பிளவர் குயின் முழு  ஆடைப்பால்மா இலங்கை...

2024-07-17 14:18:07
news-image

புதிய முறைமை​ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக...

2024-07-10 15:06:40
news-image

யூனியன் அசூரன்ஸ் அனுசரணையில் நயோமி இராஜரட்ணம்...

2024-07-05 14:42:25
news-image

2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப்...

2024-07-05 13:59:16
news-image

தேசிய வியாபாரத் தரச்சிறப்புவிருதுகள் நிகழ்வில் மிக...

2024-07-02 13:34:01
news-image

Favourite International மற்றும் Austrade Sri...

2024-06-29 18:46:27
news-image

மோட்டார் வாகன உற்பத்தி /பொருத்துவது மற்றும்...

2024-06-29 16:41:15
news-image

ஹெரிட்டன்ஸ் கந்தலம 30 ஆண்டுகால தனித்துவ...

2024-06-28 14:51:02
news-image

நியாயமான வரிவிதிப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி...

2024-06-26 00:51:50
news-image

சிவனொளிபாத மலையைப் பாதுகாக்க சியபத பினான்ஸின்...

2024-06-22 17:12:50