அரசாங்க பணி வாய்ப்புக்காக காத்திருந்து காத்திருந்து கிடைக்காதவர்கள், வேறு வழியின்றி தனியார் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் பணி செய்வர். தங்களது குடும்ப வாழ்வாதாரத்திற்கு தனியார் நிறுவனம் தரும் சம்பளம் போதாது என்பதால் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஏதேனும் வணிக நிலையத்தில் பகுதி நேர பணியாளராக பணியாற்றுவர்.
அப்போது கிடைத்த அனுபவத்தை வைத்துக் கொண்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அறக்கட்டளை அமைப்புடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து சிறிய அளவில் நிதி உதவி பெற்று வணிக நிறுவனத்தை தொடங்கி நடத்துபவர்கள் பலர். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள்.
ஆனால் சாமர்த்தியமாகவும், சாதுரியமாகவும் தங்களது உழைப்பை முதலீட்டாக மாற்றுவதற்கான சூட்சமத்தை தெரியாதவர்களாக இருப்பர். இதனால் இவர்களில் தொழிலில் தேக்கம் ஏற்பட்டு, வளர்ச்சி என்பது ஒரு எல்லைக்கு மேல் நின்றுவிடும். இதனால் மனதளவில் சோர்வடையும் இவர்களுக்கு சிறந்த தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்களை எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி தனுசு ராசியில் இருந்தால் உதாரணமாக நீங்கள் ரிஷப லக்னமாக இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பத்தாமிடமான மகர வீட்டின் அதிபதியான சனி பகவான், உங்களுடைய ராசி கட்டத்தில் தனுசு ராசியில் இருந்தால் நீங்கள் சிறந்த தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்களை எம்முடைய முன்னோர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உங்களுடைய துவி சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் முன்னோர்களின் புகைப்படத்தை இடம்பெறச் செய்யுங்கள். இதனால் அவர்களின் ஆசி கிடைத்து, லாபம் அதிகரிக்கும். தொழில் சிறப்பாக இருக்கும்.
உங்களுடைய வீட்டிலும், தொழில் நடத்தும் இடத்திலும் ராமர் பட்டாபிஷேகத்துடன் உள்ள புகைப்படத்தை வைத்து நாளாந்தம் பூஜித்து வந்தாலும் உங்களுக்கான லாபம் உறுதியாக கிடைக்கத் தொடங்கும்.
அதே தருணத்தில் நீங்கள் பயணிக்கும் போதோ அல்லது வெளியிடங்களில் இருக்கும் போது அல்லது தொழில் நடத்தும் நிறுவனத்தில் இருக்கும்போதோ யாரேனும் யாசகம் கேட்டு வந்தால் அவர்களிடத்தில் 'இல்லை' என்ற சொல்லை ஒருபோதும் உச்சரிக்க கூடாது. மேலும் இல்லை என்பதனை சைகை மூலமும் காண்பிக்க கூடாது. அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிட வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் உணவு பொருளையோ அல்லது பணத்தையோ தானமாக கொடுத்து விட வேண்டும். இதன் மூலம் உங்களுடைய தொழில் மேம்படும்.
உங்களுடைய வீடு சொந்த வீடாக இருந்தாலும் அல்லது வாடகை வீட்டாக வீடாக இருந்தாலும் வீட்டின் முன் பகுதியில் மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் செடிகளை வளர்த்திட வேண்டும். இவை உங்களுக்கு தொழில் ரீதியான அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் சூட்சமத்தை கொண்டது.
திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள இறைவனுக்கு அபிஷேகத்திற்காகவோ அல்லது நைவேத்தியத்திற்காகவோ நெய், தயிர் மற்றும் கற்பூரம் ஆகியவற்றை தானமாக வழங்கிட வேண்டும்.
வியாழக்கிழமைகளில் அரச மரத்தையும், தட்சிணாமூர்த்தியையும் வலம் வந்து வணங்கினால் தொழிலில் ஏற்படும் தடைகள் விலகி, முன்னேற்றம் விரைவாக ஏற்படும்.
எந்த காரணம் கொண்டும் எந்த சூழலிலும் ஏமாற்றவோ பொய் சாட்சி சொல்லவோ கூடாது. அன்பின் காரணமாகவோ அல்லது விசுவாசத்தின் காரணமாகவோ அல்லது சூழல் காரணமாகவோ சொல்லியிருந்தால் இதனால் தொழிலில் குழப்பங்கள் ஏற்படும். அதனுடாக நஷ்டங்கள் உண்டாகும். தொழில் மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளுக்கு இடையேயும் விரிசலை ஏற்படுத்திவிடும். அத்துடன் நில்லாமல் செல்வ நிலையில் சேதத்தை ஏற்படுத்தி, வறுமையைக் கூட உண்டாக்கிவிடும் வலிமை உண்டு. அதனால் ஒருபோதும் ஏமாற்றவோ அல்லது பொய்சாட்சியோ சொல்லாதீர்கள்.
43 என்ற எண்ணிக்கையிலான சிம்பு நாணயங்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு அதனை நாளாந்தம் தண்ணீர் நிறைந்த கோப்பை ஒன்றில் முகத்தைப் பார்த்துவிட்டு அதில் ஒவ்வொரு நாணயத்தை விட வேண்டும். 43 நாட்களுக்குப் பிறகு அந்த நீரையும், அந்த நீரில் இருக்கும் செம்பு நாணயங்களையும் அருகில் உள்ள ஓடும் நதியில் விட வேண்டும். இதனை 43 நாட்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களும், கஷ்டங்களும் விலகி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு, லாபம் வரத் தொடங்கும்.
பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைந்தவுடன் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அண்டை நாடான இந்தியாவிற்கு பயணம் செய்து, குறிப்பாக வட இந்தியாவிற்கு பயணம் செய்து அங்குள்ள கங்கை நதியில் நீராடினால் உங்களுடைய தொழிலில் புதிராக இருந்த புரியாத பல விடயங்கள் புரியத் தொடங்கி, நீங்கள் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்குவீர்கள். கங்கைக்கு நீராட செல்கிறீர்கள் என்றால் அருகே இருக்கும் காசிக்கும் சென்று, காசி விஸ்வநாதர் -கால பைரவர் - அன்னபூரணி ஆகியோரையும் தரிசித்து விட்டு வரலாம். இதனால் வங்கி கடன் கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.
உங்களது லக்னம் எதுவாக இருந்தாலும் லக்னத்திற்கு பத்தாம் வீட்டின் அதிபதி தனுசு ராசியில் இருந்தால் மேலே சொன்ன எளிய பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வாழ்வில் ஒப்பற்ற தொழிலதிபராக உயருங்கள்.
தொகுப்பு :சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM