இஸ்ரேலிய பிரஜைகள் மாலைதீவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.
காசா யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் சீற்றம் அதிகரித்துவரும் நிலையிலேயே அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடை செய்வதற்கு ஜனாதிபதி முகமட் முய்சு தீர்மானித்துள்ளார்என அவரது அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பிரஜைகளை மாலைதீவிற்கு செல்லவேண்டாம் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இஸ்ரேலியர்களிற்கு தடைவிதிக்கவேண்டும் என எதிர்கட்சியினரும் அரசாங்கத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்களும் அழுத்தங்களை பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM