நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மொரட்டுவ சொய்சாபுர பிரதேசத்தில் அமைந்துள்ள சீ தொகுதி தொடர்மாடி கட்டடத்தில் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில், அங்கு வசிக்கும் 64 குடும்பத்தினரும் அப்பாதிப்பினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதனை ஐ.டி.எம்.என்.சி. (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அங்கு நேற்றைய தினம் (01) உடன் களத்துக்கு விஜயம் செய்த கலாநிதி ஜனகன் சேதமடைந்த இடத்தை பார்வையிட்டதுடன், அந்த தொடர்மாடி கட்டட தொகுதியில் சிறுவர்கள் பலர் வாசித்து வருவது தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அக்கட்டடத்தின் பாதுகாப்பற்ற சூழ்நிலையை அவதானித்தது, அதனை உடனடியாக புனர்நிர்மானம் செய்வதற்காக ஒரு தொகை நிதியினை வழங்கினார்.
நிதி உதவி வழங்கும் இந்நிகழ்வின்போது ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும் அத்தொடர்மாடி குடியிருப்பில் உள்ள மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM