உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.வி.லோரன்ஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர்  மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி  ஆணைக்குழுவில் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இவர் இடாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடக பேச்சாளருமான பிரியந்த ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 29 வருடம் அனுபவத்தை பெற்றவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.