ஆபாசப்படநடிகை ஸ்டோர்மி டானியல் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சிறையில் அடைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வணிகபதிவுகளை பொய்யாக்கிய வழக்கில் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஸ்டோர்மி டானியல் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆபாசபட நடிகையுடனான தனது தொடர்பினை இரகசியமாக வைத்திருப்பதற்காக டிரம்ப் ஸ்டோர்மி டானியலிற்கு பணம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்தே குறிப்பிட்ட நீதிமன்ற வழக்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் முற்றிலும் யதார்த்தத்துடன் தொடர்பில்லாதவர் என ஆபாசபட நடிகை தெரிவித்துள்ளார்.
டிரம்பிற்கு சிறைத்தண்டனை விதிக்கவேண்டும்,வறியவர்களிற்கான சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிடவேண்டும் என தெரிவித்துள்ள ஸ்டோமிடானியல்ஸ்
நியுயோர்க் நீதிமன்ற நீதிபதி டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பளித்தமை அவர்கள் தனது வாக்குமூலத்தை நம்புவதை வெளிப்படுத்தியுள்ளதாக ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் ஆதரவாளர்களின் மரண அச்சுறுத்தலில் இருந்து தப்ப முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM