(நெவில் அன்தனி)
உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பழைமை வாய்ந்த 'கிரிக்கெட் பகையாளிகள்' ஆன ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் டெக்சாஸ் டலாஸ், க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கில் (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற 9ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் ஆரம்பப் போட்டியில் 7 விக்கெட்களால் ஐக்கிய அமெரிக்கா வெற்றிபெற்றது.
இரண்டு வட அமெரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஏ குழுவுக்கான அப்போட்டியில் கனடாவினால் நிர்ணயிக்கப்பட்ட 195 ஓட்டங்கள் சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆரம்ப வீரர் ஸ்டீவன் டெய்லர் ஓட்டம் பெறாமலும் அணித் தலைவர் மொனான்க் பட்டேல் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்க, ஐக்கிய அமெரிக்கா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், அண்ட்றீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 55 பந்துகளில் 131 ஓட்டங்களைப் பகிர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் வெற்றியை இலகுவாக்கினர்.
தான் எதிர்கொண்ட முதல் நான்கு பந்துகளில் ஓட்டம் பெறாமல் இருந்த ஆரோன் ஜோன்ஸ் 22 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் 40 பந்துகளில் 94 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அவர் 10 சிக்ஸ்களையும் 4 பவுண்டறிகளையும் விளாசினார்.
மறுபக்கத்தில் அண்ட்றீஸ் கௌஸ் 46 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர் ஆட்டம் இழந்ததும் களம் புகுந்த கோரி அண்டர்சன், 2 நாடுகளுக்கு ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் விளையாடிய 5ஆவது வீரரானார். அவர் 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
மிகத் துல்லியமாக பந்துவீசிய ஹர்மீத் சிங் 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கனடா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
ஆரோன் ஜோன்ஸ் (23), நவ்னீத் தலிவால் ஆகிய இருவரும் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஜோன்ஸ் ஆட்டம் இழந்ததும் களம் நுழைந்த பர்கத் சிங் 5 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
இந் நிலையில் நவ்னீத் தலிவால் நிக்கலஸ் கேர்ட்டன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
நவ்னீத் தலிவால் 44 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களையும் நிக்கலஸ் கேர்ட்டன் 31 பந்துகளில் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட ஷ்ரேயாஸ் மொவ்வா ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட டிலொன் ஹேலிகர் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
அப் போட்டியில் ஆரோன் ஜோன்ஸ் ஆட்டநாயகன் ஆனார்.
ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் தமது குழுவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளை எதிர்த்தாடவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM