நாரஹேன்பிட்ட பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாட்டு பணியில் ஈடுப்பட்டிருந்த இரு போக்குவரத்து பொலிஸாரினால் வீதி விதிமுறையினை மீறியமைக்காக தண்டப்பணம் எழுத முற்பட்ட வேளையில் கையடக்கத்தொலைபேசியில் வீடியோ எடுத்தவரை பொலிஸ் அதிகாரி தாக்கிய காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறப்பட்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு பொலிஸார் தண்டப்பணம் எழுத முற்பட்ட வேளையில் தாங்கள் சரியாக தான் வந்தோம் என்று பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவாறு அதை கையடக்கதொலைபேசியில் வீடியோ எடுத்த நபரையும் கையடக்கதொலைபேசியையும் ஒரு பொலிஸ் அதிகாரி தாக்கும் காட்சி குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

தற்போது குறித்த வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.