'பிரேமலு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மலையாள நடிகை மமீதா பைஜு - ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான 'ரெபல்' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படம் பாரிய அளவில் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெறவில்லை என்றாலும், அவர் தற்போது அதர்வா மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகிய இளம் நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டு பரபரப்பாக இயங்கி வருகிறார்.
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அதர்வா கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான எஸ். தமன் இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இந்த இரண்டு திரைப்படங்களிலும் கதையின் நாயகியாக நடிக்க நடிகை மமீதா பைஜு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதனை மமீதா பைஜு உறுதி செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அத்துடன், ''இளம் தலைமுறை கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்'' என்றும் தெரிவித்திருக்கிறார் மமீதா பைஜு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM