தமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த 'மூக்குத்தி அம்மன்' எனும் திரைப்படத்தில் மூக்குத்தி அம்மனாக லேடிஸ் சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில் மூக்குத்தி அம்மனாக மீண்டும் நடிக்க நயன்தாரா மறுப்பு தெரிவித்ததால், நடிகை திரிஷா மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார்.
நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே . பாலாஜி இயக்கத்தில் விரைவில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதற்கான திரைகதையை எழுதி நிறைவு செய்திருக்கும் ஆர் ஜே பாலாஜி , மூக்குத்தி அம்மனாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். நயன்தாரா நடிக்க உறுதியாக மறுத்துவிட்டார். இதனால் ஆர் ஜே பாலாஜி திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். கதையை முழுவதுமாக கேட்ட திரிஷா, 'மூக்குத்தி அம்மன்' ஆக நடிக்க சம்மதித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த ஆர். ஜே. பாலாஜி இந்த தகவலை அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
விரைவில் 'மூக்குத்தி அம்மன் 2: குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் ஜே பாலாஜி - திரிஷா இணையும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM