இரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தும் காரணிகள்...?!

01 Jun, 2024 | 08:22 PM
image

இன்றைய சூழலில் தெற்காசிய நாடுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரு மடங்கு வேகத்தில் உயர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் நீரிழிவு நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவில்லை என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனைகளை வைத்திய நிபுணர்களின் பரிந்துரைப்படி நாம் தொடர்ச்சியாக மேற்கொள்வதில்லை. மேலும் ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையின் முடிவுகள் ஒவ்வொரு ஆய்வகத்தை பொறுத்து மாறுபடுவதையும் நடைமுறையில் காண்கிறோம். இந்நிலையில் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவில்லை என்றால்.. அதனால் மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, பார்வை திறன் பாதிப்பு, கால் பாதிப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். சில தருணங்களில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதவர்களுக்கு உயிரை அச்சுறுத்த கூடிய அளவில் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் வைத்தியர்கள் ரத்த சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

சிலருக்கு ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனையின் போது உங்களுக்கு பார்டர் லைன் டயாபடீஸ் என குறிப்பிடுவார்கள். அதாவது சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான எல்லை கோட்டிற்கு அருகில் இருக்கிறீர்கள் என்று பொருள். இதனால் இதனை இந்த நிலையிலேயே கட்டுப்படுத்தி கொள்ளக் வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துவார்கள்.

மேலும் இத்தகைய நிலையில் உங்களுடைய பார்டர் லைன் டயாபடீசின் வகைகள் குறித்தும் வைத்தியரிடம் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் Impaired Fasting Glucose & Impaired Glucose Tolerance  என இரண்டு வகையினதான பார்டர் லைன் டயாபடீஸ் உண்டு. இதில் எந்த வகையினதான சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சை முறையை பின்பற்ற வேண்டும்.

இந்த தருணத்தில் உடல் எடையை குறைப்பதும், கொர்போஹைட்ரேட் சத்து கொண்ட உணவு பொருட்களின் அளவை குறைப்பதும் தான் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். மேலும் இதனுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையையும், உணவு முறையையும், மருந்து மாத்திரைகளையும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் சிலர் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான சிகிச்சைகளை தொடர்ந்து கொண்டிருப்பர். ஆனாலும் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு என்பது அதிகமாகவே இருக்கும். இதற்கு  அவர்களின் உணவு முறையில் சத்துமாவு கஞ்சி உள்ளிட்ட ஆரோக்கிய பானங்கள் மற்றும் இனிப்பு என ஏதேனும் ஒன்றை சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும்... இரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தி விடும். இதனால் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் எந்த காரணத்தை முன்னிட்டும் இனிப்பு மற்றும் கொர்போஹைட்ரேட் சத்து அதிகம் உள்ள உணவுகளை முற்றாக தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

வைத்தியர் ராஜேஷ் - தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12
news-image

நான்ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் எனும் கொழுப்பு கல்லீரல்...

2024-07-05 00:50:06
news-image

ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை...

2024-07-03 15:25:15
news-image

பிராங்கியாடிஸிஸ் எனும் மூச்சு குழாய் தளர்வு...

2024-07-02 23:38:44
news-image

உடல் எடை குறைப்பதற்கான நவீன சிகிச்சை

2024-07-01 19:29:59
news-image

மருந்துகளின் பக்க விளைவுப் பாதிப்புக்கும் சிகிச்சை

2024-06-29 16:15:38
news-image

ஹைட்ரோகெபாலஸ் எனும் மூளையில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-06-28 17:55:25
news-image

குருதியில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்த...

2024-06-28 14:20:41
news-image

குமட்டல் உணர்வு, வாந்திக்கு சிகிச்சை எடுக்க...

2024-06-26 17:45:16