சிறிய அளவிலான இடத்தில் வணிக நிலையத்தை திறந்து அதில் வாடிக்கையாளர்களுக்கான பன்முக சேவையை வழங்கும் தொழிலை நடத்துபவர்கள் ஒரு நாள் நாமும் சிறந்த தொழிலதிபர்களாக உயர்வோம் என எண்ணியிருப்பர். அவர்களின் சேவையை பெரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களின் கனவு பெரிதாகவே இருக்கும். இந்நிலையில் எம்மில் சிலருக்கு தொழிலதிபராக உயர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். ஆனால் அதற்கான எந்த செயல் திட்டமும் இருக்காது. இந்நிலையில் இவர்கள் தொழிலதிபராக உயர வேண்டும் என்றால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில எளிய பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி விருச்சிக ராசியில் இருந்தால்... உதாரணமாக நீங்கள் ரிஷப லக்னமாக இருக்கிறீர்கள் என்றால்.. உங்களுடைய பத்தாமிடமான மகர வீட்டின் அதிபதியான சனி பகவான் உங்களுடைய ராசி கட்டத்தில் விருச்சிக ராசியில் இருந்தால்... நீங்கள் சிறந்த தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்களை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நாளாந்தம் காலையில் எழுந்து நீராடியதும் சிறிதளவு தேனை சாப்பிடுவது தொழிலை சிறப்பிக்கும். அதே தருணத்தில் நீங்கள் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் வைத்தியர்களின் ஆலோசனையை பெற்று தேனை வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் தொழிலில் முன்னேற்றம் சாத்தியமாகும். நீங்கள் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் தேன்.. மண்ணால் உருவாக்கப்பட்ட பாத்திரத்தில் சேமித்து வைத்திருந்தால், தனி சிறப்பான பலனைத் தரும். இது சூட்சமமாக இயங்கி உங்களுடைய தொழிலில் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். நீங்கள் தொழில் நடத்தும் இடத்தில் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட மண்ணாலான சிறிய வடிவான குப்பியை வாங்கி, அதில் தேனை ஊற்றி வைத்துக் கொண்டாலும் அதிர்ஷ்டமும், வாடிக்கையாளர்களின் வரவும் அதிகரித்து லாபம் உயரும்.
தொழில் நடத்தும் இடத்திலும், வீட்டிலும் நீங்கள் வைத்துக் கொண்டிருக்கும் உங்களுடைய பணப்பெட்டி ... மரத்தினால் உருவாக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
அரச மரத்தையும், முள் செடிகளையும் ஆயுள் முழுவதும் எந்த காரணம் கொண்டும்... எந்த சூழ்நிலையிலும் .. வெட்டக்கூடாது.
உங்களுடைய இஷ்ட தெய்வத்தை செவ்வாய்க்கிழமைகளில் வணங்கும் போது இனிப்பு பொருட்களை நைவேத்தியமாக படைத்து வணங்கி அதனை பிரசாதமாக வழங்கினாலும் தொழிலில் மேன்மை கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு செந்தூரமும் , வஸ்திரமும் சாற்றி வழிபட்டாலும் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உறுதியாகும். மேலும் இத்தகைய வழிபாட்டின் காரணமாக தொழில் நடத்துபவர்களுக்கு நோய் விலகி ஆரோக்கியம் மேம்படும். கடனும் குறையும். லாபமும் அதிகரிக்கும்.
உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும்.. லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி விருச்சிக ராசியில் இருந்தால்.. மேலே சொன்ன எளிய பரிகாரங்களை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்தால்.. தொழிலில் முன்னேறி, சிறந்த தொழிலதிபராக உயரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM