இந்தியாவில் 18 வது மக்களவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் ஜூன் ஒன்றாம் திகதியான இன்று ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
இறுதி கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் 13 தொகுதிகளுக்கும், பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் , மேற்கு வங்காளத்தில் ஒன்பது தொகுதிகளும், பீகாரில் எட்டு தொகுதிகளும், ஒடிசாவில் ஆறு தொகுதிகளிலும், ஹிமாச்சல் பிரதேசத்தில் நான்கு தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்று தொகுதிகளிலும் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் தொகுதியிலும் என மொத்தம் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வாக்கு பதிவு தொடங்கி, காலை 11 மணி நிலவரப்படி இறுதிக்கட்ட தேர்தலில் 26.3 சதவீத வாக்கு பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் அனைத்து தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பிரத்யேக செயலி மூலம் தகவல்கள் தெரிவித்த பிறகு தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தின் விவரத்தை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்.
இன்று மாலை ஆறு மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கும்.
இதில் பாஜகவின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் பாஜக அறுதிப் பெரும்பான்மை பலம் பெறும் என்ற ரீதியில் தான் தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிடும் என அரசியல் பார்வையாளர்கள் அவதானிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM