ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணையை பெற வேண்டும் - கருணாகரம் எம்.பி !

01 Jun, 2024 | 08:23 PM
image

ஒரு ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணையை பெற வேண்டும் அவ்வாறு நடைபெறாமல் விட்டால் அவர்கள் ஜனநாயக மக்கள் விரோதிகள் ஆவார்.

எங்களது கட்சியின் நிலைப்பாடு உரிய காலத்தில் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதுதான் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். 

இன்று சனிக்கிழமை (01) மட்டக்களப்பில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் , 

சிங்கள பௌத்த தலைவர்களுக்கும் தற்போதுள்ள ஜனாதிபதிக்கும் தேர்தல்களை ஒத்திப் போடுவது என்பது கைவந்த கலையாகும் . 

2018 ஆம் ஆண்டு தற்போது உள்ள ஜனாதிபதி அப்போதைய பிரதமராக இருந்த காலத்தில் எங்களது தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஆலோசனை அமைவாக பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு இன்றுவரை மாகாண சபை தேர்தல் நடைபெறாமல் உள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. என்பது எல்லோருக்கும் தெரியும். பாராளுமன்றம் நீதிமன்றம் ஊடாக அனுமதிகளை பெற்று மக்கள் ஆணையின் மூலம் தான் தேர்தல்களை பிற்போட முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாறுபட்ட கருத்துகளுக்கு ஜனாதிபதி உரிய பதில்களை வழங்காத உள்ளபோது தேர்தல்கள் எவ்வாறு நடக்கும் என பொதுமக்களும் குளம்பிப்போய் உள்ள நிலையில் ஒரு ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணையை பெற வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் விட்டால் அவர்கள் ஜனநாயக மக்கள் விரோதிகள் ஆவார். 

எங்களது கட்சியின் நிலைப்பாடு உரிய காலத்தில் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதுதான். என அவர் இதன்போது தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியின் பல பகுதிகளில் செப்டெம்பர் 28...

2024-09-15 12:59:34
news-image

நிலத்தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2024-09-15 12:45:30
news-image

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து திருகோணமலையில்...

2024-09-15 12:17:33
news-image

தமிழ் மக்கள் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து...

2024-09-15 12:05:57
news-image

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும்...

2024-09-15 11:59:35
news-image

ஹாலிஎல தனியார் காணியொன்றில் கைக்குண்டு கண்டெடுப்பு 

2024-09-15 11:42:22
news-image

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டின் ஐக்கியத்துக்கு...

2024-09-15 11:44:05
news-image

அம்பன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில்...

2024-09-15 11:07:09
news-image

நாடளாவிய ரீதியில் 5ஆம் தர புலமைப்பரிசில்...

2024-09-15 12:22:52
news-image

மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை...

2024-09-15 10:20:20
news-image

அரசியல் நலன்களை அடைய சிலர் வன்முறை...

2024-09-15 09:52:57
news-image

4 கிலோ நிறையுடைய அம்பருடன் ஹம்பாந்தோட்டையில்...

2024-09-15 09:50:46