இரட்டை வேடத்தில் அசத்தும் ஹன்சிகா மோத்வானி !

01 Jun, 2024 | 04:11 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான ஹன்சிகா மோத்வானி முதல் முறையாக இரட்டை வேடத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'காந்தாரி' எனும் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'காந்தாரி' எனும் திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எல். வி. முத்து கணேஷ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் வகையிலான இந்த திரைப்படத்தை மசாலா பிக்ஸ் பட நிறுவனத்தின் மூலம் இயக்குநர் ஆர். கண்ணன் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே இந்த திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி நரிக்குறவர் இன பெண்மணியாக தோன்றுகிறார் என்றும், இவை ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என்றும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் 'ஜென்டில்வுமன்'...

2025-02-19 17:59:57
news-image

தந்தைக்கும்- மகனுக்கும் இடையே உள்ள உறவு...

2025-02-19 17:56:26
news-image

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட பிரேம்ஜியின்...

2025-02-19 17:56:47
news-image

'டீசல்' படத்திற்காக ஹரீஷ் கல்யாணுடன் கரம்...

2025-02-19 17:41:26
news-image

அஜித் குமாருடன் மீண்டும் இணைந்திருக்கும் சிம்ரன்

2025-02-19 17:39:36
news-image

அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன்...

2025-02-19 16:53:13
news-image

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த '2K லவ்...

2025-02-18 17:47:19
news-image

'ரைசிங் ஸ்டார்' துருவ் விக்ரம் நடிக்கும்...

2025-02-18 17:40:00
news-image

'மதராஸி'யாக மிரட்டும் சிவகார்த்திகேயன்

2025-02-17 17:33:46
news-image

விஜய் சேதுபதி - லோகேஷ் கனகராஜ்...

2025-02-17 17:38:15
news-image

ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையால்...

2025-02-17 16:27:34
news-image

யோகி பாபு நடிக்கும் 'லெக் பீஸ்...

2025-02-17 16:32:01