இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ஆஸி அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடையில் கடந்த சில நாட்களாக மோதல்கள் இடம்பெற்று வந்தது.

இதன் போது விராட் கோஹ்லியை ஸ்டீவ் ஸ்மித் கேலி செய்ததாகவும், ஸ்டீவ் ஸ்மித்தை விராட் கோஹ்லி கேலி செய்வதாகவும் காணொளிகள் வெளியாகின.

இதன் போது விராட் கோஹ்லி ஆஸி வீரர்கள் தனக்கு ஒருபோதும் நண்பர்கள் இல்லையென தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக கிரிக்கெட் ஆர்வாளர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அதுமாத்திரமின்றி வலைத்தளங்களில் பல மீம்ஸ் வீடியோக்களும் பதிவுசெய்யப்பட்டன. அதில் ஒரு மீம்ஸ் காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. விராட் கோஹ்லி மற்றும் ஸ்மித் இருவரும் காதலிப்பது போல் சித்தறிக்கப்பட்ட காணொளியே இவ்வாறு வைரலாக பரவிவருகின்றது.