வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற சிறைச்சாலை கைதி ஒருவர் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இவர் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்ற நபரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த புகைப்படத்தில் காணப்படும் நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 07185 91364 அல்லது 07185 91370 என்ற தலைமன்னார் பொலிஸ் நிலைய தொலைப்பேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM