38 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது

01 Jun, 2024 | 11:17 AM
image

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட  38 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (30) இரவு 10 மணியளவில் துபாயிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர் கொண்டுவந்த பயணப்பொதியிலிருந்து 38,400 சிகரெட்டுகள் அடங்கிய 192 சிகரெட்டு காட்டுன்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபரான வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37
news-image

மட்டக்குளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:59:30
news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08
news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25
news-image

அதுருகிரியவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 18:58:16
news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54