திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆறுதிருமுருகன் கோரிக்கை

Published By: Vishnu

01 Jun, 2024 | 02:44 AM
image

( எம்.நியூட்டன்)

திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநருக்கு  எழுதியுள்ள கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் அக்கறை எடுத்தல் வேண்டும் .

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சைவத் தமிழர்களின் தலையாய கோவிலாகிய திருக்கோணேச்சரத்தை பாதுகாப்பதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உடனடி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

திருக்கோணேச்சரத்துக்கு செல்லும் பாதையில் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடைகளை அவ்விடத்தில் இருந்து நீக்கி அவர்களுக்கு மாற்று ஒழுங்கு செய்யவும்.

கோணேச்சரத்துக்கு செல்லும் பக்தர்களின் புனித வழிபாட்டுக்கு உரிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

திருக்கோணேச்சர இடையூறுகளைச் திருப்பணிக்கு தொல்லியல் திணைக்களம் பல்வேறு செய்து வந்துள்ளது. இவ்விடையூறுகளை நிறுத்தி திருக்கோணேச்சரத்தின் பாரிய திருப்பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடு செய்து உதவுங்கள்.

திருக்கோணேச்சர புனித தீர்த்தமாகிய பாபநாசம் தீர்த்தக்கரையை புனருத்தாரணம் செய்து பொதுமக்கள் அவ்விடத்தில் தமது கடமைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

திருக்கேதீச்சர ஆலயத்தை இந்திய அரசு கருங்கற் கோயிலாக புனர்நிர்மாணம் செய்தது போல் திருக்கோணேச்சரத்தையும் அழகாக நிர்மானிப்பதற்கு இந்திய அரசிடம் வேண்டுதல் விடுவிக்கப்பட்டது. அவர்கள் அக்கறையாக இருப்பதாக தகவல்கள் திரட்டினார்கள் ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேற்படி விடயங்கள் தொடர்பாக மதிப்பார்ந்த ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்து உதவுமாறு நன்றியோடு வேண்டுகிறோம் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12
news-image

தம்புள்ளையில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சி விற்பனை செய்தவர்...

2024-10-05 15:46:39
news-image

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர்...

2024-10-05 15:18:19