சென்னையில் 50 இலட்சம் ரூபா சொத்தை அபகரிப்பதற்காக கணவன் இறந்து விட்டார் என்று பொய் கூறி சான்றிதழ் பெற்ற மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ் என்பவர் பொலிஸ் அதிகாரி ஒருவரைச் சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் தனது மனைவி, மகனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி யுள்ளார்.

குறித்த மனுவில், "சென்னை இரண்டாம் கட்டளை கிராமத்தில் 50 இலட்சம் ரூபா மதிப்புள்ள சொத்து எனக்கு உள்ளது. எனது மனைவி டயானா கருத்து வேறுபாடு காரணமாக என்னை விட்டு பிரிந்து வாழ்கிறார். எனது மகன் எனது மனைவியோடு சேர்ந்து கொண்டு, இரண்டாம் கட்டளை கிராமத்தில் இருந்த எனது சொத்தை எனக்கு தெரியாமல் விற்றுவிட்டார்.

அந்த சொத்தை விற்பதற்காக உயிரோடு இருக்கும் நான் இறந்து விட்டதாக பொய்யான தகவலைச்சொல்லி எனது இறப்பு சான்றிதழை வாங்கி, சொத்து விற்பனைக்கு பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.