2024-25 கல்வியாண்டில் சுய நிதியிடல் திட்டத்தின்கீழ் MBBS, BDS, BE, B.Tech, B.Pharm, B.Arch ஆகியவற்றில் பட்டப்படிப்புகள், டிப்ளோமா மட்ட தொழில்நுட்ப கற்கை நெறிகள் மற்றும் மருந்தியல் டிப்ளோமா ஆகியவற்றுக்கு தகுதியான இலங்கை மாணவர்களிடமிருந்து (PIO/OCI அட்டைகள் வைத்திருப்போர் மற்றும் NRI தவிர்ந்தோர்) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
MBBS/BDS கற்கை நெறிகளுக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் ‘நீட்’ (NEET) பரீட்சையில் ஆகக்குறைந்தது 50 சதவீத புள்ளிகளையும் உயர் தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தலா 50 வீதமான புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும்.
அதேவேளை BE/B.Tech மற்றும் பொறியியல் டிப்ளோமா கற்கைநெறிகளைத் தொடர விரும்புவோர் உயர் தரத்தில் கணிதம், பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாடங்களில் தலா 60 வீதமான புள்ளிகளையும் ஆங்கிலத்தில் 50 வீதமான புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமானதாகும்.
அதேபோல, B.Pharmacy மற்றும் மருந்தியல் டிப்ளோமா கற்க விரும்புவோர் உயர் தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் தலா 60 வீதமான புள்ளிகளையும் ஆங்கிலத்தில் 50 வீதமான புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும்.
B.Arch கற்கையினைத் தொடர விரும்புவோர், புதுடில்லி, கட்டடக்கலை சபையினால் குறித்துரைக்கப்பட்டதகுதிகாண் உளச்சார்பு பரீட்சையில் சித்தியெய்த வேண்டிய தேவை உள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள், வேலை நாட்களில் 1400 மணி முதல் 1600 மணி வரையான நேரத்தில், கொழும்பு 3இல் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவில் இலங்கை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரச் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் பிறப்புச் சான்றிதழையும் காண்பித்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி எதிர்வரும் ஜூன் 18 என்பது குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM