எம்மில் பலரும் சுய உதவிக் குழுக்கள், அரசாங்க அனுசரணை, வங்கி கடனுதவி, தனியார் நிறுவனத்தின் கடன் உதவி ஆகியவற்றைப் பெற்று சிறிய அளவில் தொழிலை நடத்தி, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருப்பர். இவர்களில் பலருக்கும் விரைவில் முன்னணி தொழிலதிபராக உயர வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருக்கும். இதற்காக தங்களுடைய திட்டமிடலில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பர்.
இந்தத் தருணத்தில் எதிர்பாராத அல்லது விவரிக்க இயலாத காரணங்களால் செய்து வரும் சிறிய தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டாலோ அல்லது தடங்கல் ஏற்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைந்தாலோ என்ன செய்வது? என்று தெரியாமல் தடுமாறி நிற்பர். இத்தகைய தருணங்களில் அவர்களுக்கு எம்முடைய ஆன்மீக அன்பர்களும், ஜோதிட நிபுணர்களும் ஏராளமான வழிகாட்டுதல்களை வழங்கிக் கொண்டிருப்பர். இந்தத் தருணத்தில் தொழிலதிபராக உயர வேண்டும் என்றால் சில எளிய பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி துலாம் ராசியில் இருந்தால் உதாரணமாக நீங்கள் ரிஷப லக்னமாக இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பத்தாமிடமான மகர வீட்டின் அதிபதியான சனி பகவான் உங்களுடைய ராசி கட்டத்தில் துலாம் ராசியில் இருந்தால் நீங்கள் சிறந்த தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்களை எம்முடைய முன்னோர்கள் பின்வருமாறு பட்டியலிட்டிருக்கிறார்கள்.
அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உருளைக்கிழங்கை வாங்கி அதனை தானமாக தர வேண்டும். மேலும் ஆலயங்கள் மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு வெண்ணெய் மற்றும் தயிர் பொருட்களை தானமாக வாங்கித் தர வேண்டும்.
வெள்ளிக்கிழமை தோறும் உங்களுடைய வீடு மற்றும் தொழில் நடத்தும் இடத்தில் பசு மாட்டின் கோமியம் எனும் புனித நீரை தெளிக்க வேண்டும்.
உங்களுக்குத் திருமணம் ஆகி இருந்தால் மாமியார் அல்லது மாமியார் வீட்டிலிருந்து வெள்ளியினாலான பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு மனைவியுடன் தனி குடித்தனம் செல்ல நேர்ந்தால் அந்தத் தருணத்தில் மாமியார் வீட்டிலிருந்து வெள்ளியினாலான ஒரு சிறிய கோப்பையையோ அல்லது ஒரு மேஜை கரண்டியையோ ஏதேனும் ஒரு பொருளை வாங்கி, அதனை உங்களது வீட்டில் வைத்திருந்தால் உங்களது தொழில் செழிக்கும்.
நீங்கள் இளம் தொழிலதிபராக இருந்தாலும் திருமண விடயத்தில் காதல் திருமணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் பெற்றோர்களால் நிச்சயித்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் போது தான் உங்களுடைய தொழில் தொடர்ச்சியாக மேன்மை அடையும். எதிர்பாராத சில சூழல் காரணமாக நிர்பந்தத்தின் பெயரிலோ அல்லது கட்டாயத்தின் பெயரிலோ காதல் திருமணம் செய்து கொண்டிருந்தால் திருமணத்தால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய மகிழ்ச்சி, இன்பம், சந்தோஷம், மன நிறைவு. ஆகியவை முழுமையாக கிடைக்காது. அதில் எப்போதும் குறை என்பது ஏற்பட்டு, அவை நீடித்துக் கொண்டே இருக்கும். இதனால் காதல் திருமணத்தை விட பெற்றோர்கள் நிச்சயத்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
பசியாறுவதற்கு முன் வெள்ளியினாலான தட்டினை வைத்துக்கொண்டு, அதில் தேனை ஊற்றி சாப்பிட தொடங்கினால் உங்களுடைய தொழிலில் திடீரென்றோ அல்லது திட்டமிட்டோ ஏற்படுத்தப்படும் சிக்கல்களும், தடைகளும் மறைந்து சீரான வளர்ச்சி கிடைக்கும். அதே தருணத்தில் நீங்கள் பசியாறும் வெள்ளி தட்டினை எக்காரணத்தைக் கொண்டும் மாமியார் வீட்டிலிருந்து பெறக் கூடாது. நீங்கள் உழைத்து பொருளீட்டிய பணத்திலிருந்து தான் வெள்ளி தட்டையும், தேனையும் வாங்கி பசியாற வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி உங்களுடைய ராசி கட்டத்தில் துலாம் ராசியில் இருந்தால் மேலே சொன்ன பரிகாரங்களை செய்தால், தொழிலில் முன்னேறி முன்னணி தொழிலதிபராக உயரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM