திருமண நிகழ்வில் மோதல் ; சமரசம் செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

31 May, 2024 | 02:45 PM
image

மாவத்தகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுக் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இவர் மாவத்தகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (30) இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்புவதற்காகத் தயாராக இருந்த போது, அந்நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் ஹோட்டல் வளாகத்திற்கு முன்பாக மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இவர் இந்த மோதலை சமரசம் செய்வதற்காகச் சென்றுள்ள நிலையில் அங்கிருந்தவர்கள் இவரைப் பலமாகத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்கனை, பின்னவலை பிரதேசத்தைச் சேர்ந்த  24, 27 மற்றும் 29 வயதுடைய மூன்று நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37