பியர் அருந்த வேண்டாம் என தாய் கூறியதால் அதனை ஏற்றுக்கொள்ளாத மகன், கத்தி ஒன்றை எடுத்து தனது வயிற்றில் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் பதுளை நியூபேக், எல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.

நியூபேக் பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த 27 வயதுடைய இளைனே இவ்வாறு காயமடைந்து கவலைக்கிடமான முறையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

 தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக கடமை புரியும் குறித்த இளைஞன் சம்பவ தினத்தன்று பியர் அருந்திய நிலையில் பியல் போத்தல்களுடன் வீட்டுக்கு நேற்றிரவு சென்றுள்ளார்.

இதனை அவதானித்த தாய் மகனை பியர் குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மகன் கத்தி ஒன்றை எடுத்து தனது வயிற்றில் குத்தியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் கவலைக்கிடமான முறையில் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடரப்லி எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.