உலக பரா சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற சமித்த, இந்திக்க, பாலித்த ஆகியோரை டயலொக் கௌரவித்தது

Published By: Vishnu

31 May, 2024 | 03:04 AM
image

(நெவில் அன்தனி)

ஜப்பானின் கோபே விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற இலங்கை பரா மெய்வல்லுநர்களான சமித்த துலான், இந்திக்க கமகே, பாலித்த பண்டார ஆகியோரை டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் சின்னங்கள் வழங்கி பாராட்டி கௌரவித்தது.

ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் 66.49 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சமித்த துலான் 

F44 பிரிவில் உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கதை வென்றார்.

அப் போட்டியில் F42, F43, F44, F64 ஆகிய நான்கு வகைப்படுத்தல் பிரிவுக்குட்பட்ட பரா மெய்வல்லுநர்கள்போட்டியிட்டனர்.

ஆண்களுக்கான F63 வகைப்படுத்தல் பிரிவு குண்டு எறிதல் போட்டியில் F42 வகைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த பாலித்த பண்டார வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அவர் குண்டை 14.27 மீற்றர் தூரத்திற்கு எறிந்து  மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

இந்த வைபவத்தில் பேசிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் ஆபத்து மற்றும் இணக்கப் பிரிவு தலைமை அதிகாரி அசங்க ப்ரியதர்ஷன, 'பரா விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் தனிப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கிவருகிறது. தேசிய பராலிம்பிக் குழுவுக்கு 2000ஆம் ஆண்டிலிருந்து டயலொக் ஆசிஆட்டா பூரண ஆதரவை வழங்கி வருகிறது. பரா விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர்களுக்கு சின்னங்கள் வழங்கி கௌரவிப்பதையிட்டு பெருமை அடைகிறோம்' என்றார்.

இந்த வைபவத்தில் பேசிய தேசி பராலிம்பிக் குழு தலைவர் கேணல் தீப்பால் ஹேரத், 'கோபேயில் தினேஷ் ப்ரியன்தவுக்கு பதக்கம் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம். அவர் உரிய வகைப்படுத்தலுக்கு தகுதியற்றவர் என இந்தியாவினால் சமர்பிக்கப்பட்ட ஆட்சேபனையால் அவருக்கு கிடைக்கவிருந்த வெள்ளிப் பதக்கம் பறிபோனது. ஆனால், அவர் இதற்கு முன்னர் வென்றெடுத்த பதக்கங்கள் அவருக்கே சொந்தம் என்பதை உலக பரா மெய்வல்லுநர் சங்கம் உறுதிசெய்தது. ஆனால் அவருக்கு இனிமேல் பரா மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்ற முடியாது. அவர் ஓய்வு பெறத் தீர்மானத்துள்ளார். அவரை பராலிம்பிக் குழு வாழ்த்துகிறது' என்றார்.

இதேவேளை பதக்கங்கள் வென்ற பரா மெய்வல்லுநர்களையும் அவர் பாராட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு பாகிஸ்தானின்...

2024-10-14 19:05:13
news-image

மும்பை இண்டியன்ஸ் அணியில் மீண்டும் பயிற்றுநரானார்...

2024-10-14 17:12:15
news-image

செப்டெம்பர் மாதத்திற்கான அதிசிறந்த ஐசிசி வீரர்...

2024-10-14 15:53:25
news-image

இலங்கை - மியன்மார் 2ஆவது சிநேகபூர்வ...

2024-10-14 13:23:12
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை...

2024-10-13 23:45:22
news-image

பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்...

2024-10-14 00:15:30
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்டத்தில் இலங்கை ஐந்தாம்...

2024-10-13 17:01:19
news-image

சகலதுறைகளிலும் கேர் பிரகாசிப்பு: இலங்கையுடனான போட்டியில்...

2024-10-13 04:26:05
news-image

பங்களாதேஷுக்கு எதிரான மகளிர் ரி20 உலகக்...

2024-10-13 04:23:14
news-image

இலங்கை மகளிர் அணி மிக மோசமாக...

2024-10-12 15:11:16
news-image

பாகிஸ்தானை 9 விக்கெட்களால் வீழ்த்திய அவுஸ்திரேலியா...

2024-10-12 01:08:44
news-image

20 வயதின்கீழ் ஆண்களுக்கான மத்திய ஆசிய...

2024-10-11 19:39:38