(எம்.ஆர்.எம்.வஸீம்)

ராஜபக்ஷ் அரசாங்கத்தில் நீதித்துறை நடவடிக்கையில் ஏற்பட்ட நம்பிக்கையீனமே கலப்பு நீதிமன்றம் தொடர்பான பொறிமுறைக்கு காரணமாகும். அத்துடன் தற்போதைய நிலையில் நீதித்துறையில் சுயாதீனத்தன்மை பேணப்படுவதால் கலப்பு நீதிமன்றத்துக்கான தேவை இல்லை என அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ் கண்கந்த தெரிவித்தார்.

இலங்கை நீதிமன்ற வைத்திய சங்கத்தின் வைத்தியர் குழுவினர்களால் தயாரிக்கப்பட்ட அனர்த்தங்களின்போது இடம்பெறுகின்ற மரணங்கள் மற்றும் பேரழிவுகளை குறைப்பதற்கான திட்டம் வெளியீட்டு நிகழ்வு பத்தரமுல்லை மொனாரிஞ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.