2024 ஜூன் மாத ராசி பலன்கள்

30 May, 2024 | 06:19 PM
image

மேஷம்

உரிமைகளை எதிர்கொண்டு கடமையை செய்யும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குருவுடன் ஸ்தானாதிபதி இணைவு பெறுவதும் ராசிநாதன் ராசியில் அமர்வதும் லாபாதிபதி சனி லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும் உங்களின் தொழிலில் மேன்மையை அடைவீர்கள். எதிர்பாராத பணவரவுகள் கைகூடும். சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் அதன் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

எதிர்கால திட்டங்கள் சிறப்பாக அமையும். எதிர்ப்புகள் குறையும். வரவுக்குள் செலவு கட்டுப்படும். அரசியலில் உங்களின் எதிர்பார்ப்பு ஓரளவு நடைமுறைக்கு வரும். உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். விளையாட்டுத்துறையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பெண்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும்.

சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலையில் சில கவனக்குறைவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது. உடல் நலனில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி தனஸ்தானத்தில் அமர்வது பூர்வீக சொத்து மூலம் பணவரவு சிலருக்கு அமையும். சிலர் புது வீடு மாற்றலாகி செல்வீர்கள்.

கருத்து வேறுபாடுகளுடன் இருக்கும் கணவன் மனைவி பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் அமையும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். தொடர்ந்து கண்காணித்து வருவதன் மூலம் சில புதிய ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். பணவரவு தேவைக்கு வரும். தாயார் உடல் நலனை கவனிக்க வேண்டி வரும்.

சந்திராஷ்டம நாட்கள்:

19-06-2024 புதன்கிழமை காலை 10.57 முதல் 21-06-2024 வெள்ளிக்கிழமை மாலை 06.55 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், வெண்மை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

திங்கட்கிழமை மாலையில் சிவன் ஆலயம் சென்று தீபமேற்றி செவ்வாழைப்பழம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் நன்மையாக அமையும்.

ரிஷபம்

வாழ்க்கை மேம்பாடு அடைய வேண்டியதை செய்யும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குருவோடு ராசிநாதன் அமர்வதும் தொழில் ஸ்தானத்தில் உங்களின் யோகாதிபதி சனி அமர்வதும் உங்களின் அன்றாட பணிகளை சிறப்பாக்கும். தொழில் சார்ந்த வெளியூர் பயணம் சிறப்பாக அமையும். நீங்கள் பல நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த காரியம் தடை நீங்கி சுபீட்சமாக அமையும்.

குரு இருக்கும் இடத்தை காட்டிலும் பார்க்கும் இடம் சிறப்பானது என்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் போன ஜென்ம கர்ம வினைகளை நீக்கிக்கொள்ள தீர்த்த யாத்திரைகள், பரிகார கோவில்களுக்கு சென்று நிவர்த்தி செய்துகொள்ள வாய்ப்பு அமையும். குடும்பத்தில் இருந்து வந்த பல சச்சரவுகள் முடிவுக்கு வரும்.

அரசியலிலும் பொது வாழ்விலும் நீங்கள் நினைத்தபடி காரியம் நடக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு புதிய நல்ல நிறுவனத்தின் மூலம் புதிய ஒப்பந்தங்கள் அமையும். இனி உங்களுக்கு படிப்படியான வளர்ச்சி இருக்கும். சிலருக்கு தடைபட்ட திருமணம் நடக்கும். திருமண முயற்சிகள் விரைவில் நடக்கும். 

குலதெய்வ வழிபாடுகள் மூலம் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதார தடைகள் உண்டாகும். தொழிலில் புதிய முதலீடு செய்வதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்கள் வேலை கிடைத்து, அதன் மூலம் சம்பாதிப்பர்.

சந்திராஷ்டம நாட்கள்:

21-06-2024 வெள்ளி மாலை 06.56 மணி முதல் 23-06-2024 ஞாயிறு இரவு 12.31 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு இலுப்பெண்ணெய் தீபமேற்றி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக்கொள்ள தடைகள் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள்.

மிதுனம்

சாதிக்க நினைப்பதை உடனே செய்ய நினைக்கும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று உங்களின் தனஸ்தானத்தை பார்வை இடுவதால் உங்களின் தேவைகளுக்கு ஏற்ப பண வரவு கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த வீடு கட்டும் கனவு உங்களுக்கு சாதகமாக அமையும். விரைவில் அது சம்மந்தமான சில காரியங்களை தெரிவு செய்வீர்கள்.

உங்களின் கல்வி மேன்மை உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு உறுதுணையாக செயல்படும். நீங்கள் தொழில் செய்யும் முயற்சிகளை சில காலம் தள்ளிப்போடுவது நல்லது. குறைந்த முதலீடு செய்வது நல்லது. சொந்த குடும்பம் சார்ந்த சுபகாரியங்களால் செலவுகள் உண்டாகும். 

அடிக்கடி புதிய செலவுகள் வரும் என்பதால் உங்களின் வரவுக்குள் செலவுகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது. சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். கருத்து வேறுபாடுகளுடன் இருந்த கணவன்- மனைவி உறவுக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று உறவு இணக்கமாகும். குடும்ப பாரத்திலிருந்து சற்று விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் குறையும்.

கலைத்துறையினர் நிகழ்ச்சிகள் வெளி இடங்களில் இருக்கும் என்பதால் வெளி இடங்களுக்கு சென்று வரவேண்டி வரும். பொது வாழ்வில் சிலருக்கு அதிக அலைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த சில காரியங்கள் சில தடைகளுக்கு பிறகு நிறைவேறும். உங்களின் உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு இருக்கும். இதனால் வேறு ஊருக்கு சென்று வர வேண்டிவரும். முக்கிய காரியத்தை தள்ளிப் போடாமல் உடனே செய்வது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்: 23-06-2024 ஞாயிறு இரவு 12.32 மணி முதல் 26-06-2024 புதன் அதிகாலை 04.11 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: இளம் பச்சை, ஒரெஞ்ச், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு அன்று மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் நன்மை உண்டாகும்.

கடகம்

நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் அமர்ந்திருப்பதும், உங்களின் ராசிநாதன் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து, முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதும் குரு பார்வைபடும் இடங்களால் உங்களின் கடந்த கால சில தொய்வுகள் சீராகி, வளம் பெருகும். 

அட்டம சனியால் சில தொல்லை இருப்பதால் உண்டாகும் காரிய தடை, குருவால் மேன்மை அடைந்து வளம் பெறும். உங்களின் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய், உங்களின் ராசியை பார்ப்பதால் பிரச்சினைகளுடன் சென்று கொண்டிருந்த தொழில் சற்று மேன்மை பெற்று நல்ல வளர்ச்சிக்கு திரும்பும்.

குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் ஓரளவு சரியாகும். உங்களின் உயர் கல்விக்கான தடை நீங்கும். அரசியலில் உங்களை ஏளனம் செய்தவர்கள் மீண்டும் உறவாடுவார்கள். இழந்த சில உரிமைகளை மீட்டெடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

வரவுக்குள் செலவுகளை குறைத்துக்கொள்வீர்கள். எதற்கும் யாரையும் முழுவதும் நம்பாமல், கண்காணிப்புடனும், விழிப்புடனும் இருப்பீர்கள். உரிய நேரத்தில் உங்களின் கவனம் செயலில் செய்து பலவித சிக்கலிலிருந்து மீள்வீர்கள். தங்களின் தேவைகளுக்கேற்ப பண வரவு இருக்கும். உடல் நலனில் அக்கறை கொள்வது நன்மையை தரும்.

சந்திராஷ்டம நாட்கள்:

26-06-2024 புதன் அதிகாலை 04.12 மணி முதல் 28-06-2024 வெள்ளி மாலை 06.47 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், சுப்ரமணியருக்கு செவ்வாய்க்கிழமை நெய் தீபமேற்றி வணங்கி வர சகல சௌபாக்கியமும் கிட்டும்.

சிம்மம்

கொள்கையை உருவாக்கி அதன்படி நடக்கும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில், தொழில் ஸ்தானாதிபதியுடனும், லாபாதிபதியுடனும், குருவுடனும் இணைந்திருப்பது உங்களின் தொழிலில் பலவிதமான வருமான இலக்குகளையும் தொழில் முனைப்பும் உண்டாக்கும். இதுவரை சொந்த தொழில் செய்யாதவர்கள் கூட குறுகிய கால தொழிலில் ஈடுபட்டு லாபத்தை பெறுவார்கள்.

முக்கிய நிகழ்வுகளையும், நீங்களே உருவாக்கி சிறப்புடன் செயல்படுத்தி காட்டுவீர்கள். எதையும் முன்கூட்டியே யோசிக்காமல் சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி செயல்களை உருவாக்குவீர்கள். இதன் மூலம் நற்பலன்களை பெறுவீர்கள். அரசியலில் உங்களின் செல்வாக்கு உயரும். காரியத்தில் நல்ல கவனம் செலுத்தி உங்களின் பதவியை தக்கவைத்துக்கொள்வீர்கள்.

பொது வாழ்வில் மக்கள் மத்தியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் உண்டாகும். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளைப் பெற்று நலன் பெறுவீர்கள். குறைந்த நேரத்தில் என்ன சாதிக்க முடியுமோ... அதை உடனே செய்துவிடுவீர்கள். 

உங்களின் உடல் நலனில் கவனம் செலுத்தி நலம் பெறுவீர்கள். வரவேண்டிய பணம் சில காலம் தாமதமாகி, தடைப்பட்டு மீண்டும் வந்து சேரும். உங்களின் பேச்சுத்திறன் மேம்படும். வெளியூர் பயணம் பயனுள்ளதாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்:

28-06-2024 வெள்ளி காலை 06.48 மணி முதல் 30-06-2024 ஞாயிறு இரவு 12.51 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடும், செவ்வாய்க்கிழமைகளில் முருகன் வழிபாடும் செய்து வர, நினைத்த காரியம் தடையின்றி நடக்கும்.

கன்னி

வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள நினைக்கும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனுடன் குருவும் இணைந்து உங்களின் ராசியை குரு பார்வை படுவதும் லாபாதிபதி சந்திரனின் பார்வை ராசிக்கு அமைவதும் கஜகேசரி யோகம் உண்டாகும். பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளில் அடிபட்டுக் கிடந்த நிலை மாறி உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சில விடயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.

அதிக அலைச்சல்கள் குறைந்து, வெளியிடம் செல்வது குறைந்து, இருக்கும் இடத்திலேயே சகல காரியங்களையும் நடத்துவீர்கள். அரசியலில் உங்களின் செல்வாக்கு மீண்டும் உயரும். நல்ல அரசியல் ஆலோசகராக திகழ்வீர்கள். பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். எதையும் தெளிவாக செய்து முடிப்பீர்கள். கருத்துகளை சொல்வதில் துணிச்சலுடன் இருப்பீர்கள்.

முக்கிய பிரமுகர் சந்திப்பு வளம் பெறச் செய்யும். அதிகம் பேசுவதை குறைத்துக்கொள்வீர்கள். சாதிக்க நினைப்பீர்கள். பல விளையாட்டுகளில் கலந்துகொள்வீர்கள். காலத்தை வீணடிக்காமல் அடுத்தடுத்து செயற்படுவீர்கள். 

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். நல்ல நிகழ்ச்சியை சிறப்பாக செய்து தருவீர்கள். மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். உடல் நலனில் தனி கவனம் செலுத்தி, உடலை பாதுகாத்துக்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக வராதிருந்த பணம் வந்து சேரும்.

சந்திராஷ்டம நாட்கள்:

02-06-2024 ஞாயிறு இரவு 12.52 முதல் 05-06-2024 புதன் அதிகாலை 04.02 மணி வரை.

30-06-2024 ஞாயிறு காலை 09.10 முதல் 02-07-2024 செவ்வாய் பகல் 12.15 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென் மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல தடைகளும் நீங்கும்.

துலாம்

துணிச்சலுடன் எதையும் செய்து காட்டும் துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு அனைத்து கிரகங்களும் மறைவு ஸ்தானங்களில் மறைவு பெறுவதும், ராசிநாதன் அட்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று தனஸ்தானத்தை பார்வை இடுவதும், உங்களின் ராசிக்கு எதிர்பாராத தனவரவை உண்டாக்கும். காலத்துக்கு தகுந்தபடி சிறப்பான வளம் பெறுவீர்கள்.

செவ்வாய் உங்களின் ராசியை ஆட்சி பெற்று பார்வை இடுவதால், உங்களின் மனவலிமை சிறப்பாக அமையும். நண்பர்களின் உதவியுடன் சகல காரியமும் செய்து விடுவீர்கள். குடும்பத்தில் சிறு சச்சரவு உண்டாகும். பஞ்சம ஸ்தானத்தில் சனி அமர்ந்து உங்களுக்கு சில காரியங்களில் ஊக்கம் தந்து வளம் பெற உதவும்.

விவசாய பணியில் குறைந்த லாபமே கிட்டும். மாணவர்களின் கல்வி மேலும் வளம் பெற செய்யும். உயர் கல்வி பெறுவதில் சிலருக்கு உதவிகள் கிடைக்கும். அதிக அலைச்சலை குறைத்துக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களுக்கு புதிய திருப்பத்தை தரும். பாதிக்கபட்ட சிலரின் காரியங்களில் நீங்கள் தலையிட்டு காரியத்தை சுபமாக்கி தருவீர்கள்.

கலைத்துறை சார்ந்தவர்களுக்கு முயற்சிகளின் மூலம் சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த தொழிலில் கூடுதல் விற்பனை மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சில சலுகைகள் பிறருக்கு கிடைத்தாலும் அதை பற்றி வருத்தம் கொள்ள மாட்டீர்கள். உங்களின் தேவைக்கு ஏற்ப பண வரவு இருக்கும். அவசர காலத்தில் உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

05-06-2024 புதன் அதிகாலை 04.03 மணி முதல் 07-06-2024 வெள்ளி காலை 08.55 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து வணங்கி வர சகல காரியங்களும் ஏற்றம் பெறும்.

விருச்சிகம்

விரும்பிய வாழ்க்கையை தெரிவு செய்யும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், தொழில் ஸ்தானாதிபதியின் பார்வை பெறுவதும், உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். ஏற்கனவே அர்த்தாஷ்ட சனி இருந்து வருவதால் குரு பார்வையால் சனியின் தாக்கம் குறைவாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவு நீங்கும்.

உடல் நல குறைவுகள் சற்று குறையும். மருத்துவ செலவுகள் குறையும். உங்களின் முக்கிய காரியங்களால் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். பொது விடயங்களில் அதிகமான ஈடுபாடுகளை கொள்வீர்கள். ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் மறைவு பெற்றும் உங்களின் ராசியை பார்ப்பதால் உங்களின் மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும்.

விளையாட்டு துறையில் இருப்பவருக்கு வரவேற்பு கிடைக்கும். குறைந்த முதலீடு மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குறுகிய கால தொழில் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். சகோதரர்களின் அன்பைப் பெறுவீர்கள். சிலருக்கு நண்பர்களின் மூலம் நல்ல வாழ்க்கை சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சி நடக்கும்.

வெளிநாடு செல்பவருக்கு வேலையும், விசாவும் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விளையாட்டில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். வரவுக்கு தகுந்த செலவுகளை செய்து நன்மையை பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:

21-06-2024 வெள்ளி மாலை 06.56 மணி முதல் 23-06-2024 ஞாயிறு இரவு 12.31 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி செவ்வரளி பூ வைத்து வடை மாலை சாற்றி வேண்டிக்கொள்ள சகல தடைகளும் நீங்கி, சுபீட்சம் பெறுவீர்கள்.

தனுசு

தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தை ராசிநாதன் பார்வை இடுவதும் முயற்சி ஸ்தானத்தில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று அமர்வதும் உங்களின் துணிச்சலான எந்த செயற்பாடுகளும் நன்மையைப் பெற்று தரும். சுகஸ்தானத்தில் ராகுவுடன் சந்திரன் இணைவு பெற்றிருப்பது உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டியதிருக்கும்.

சிலருக்கு சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். சிலருக்கு தெரியாத சில மன உளைச்சல் உண்டாகலாம். பஞ்சம ஸ்தானத்தில் பஞ்சமாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று லாபஸ்தானத்தை பார்ப்பதால், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் உன்னதமான செயல் மூலமாக அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும். 

அரசியலிலும் பொது வாழ்விலும் நீங்கள் திறம்பட செயற்படுவீர்கள். சூரியன் சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து விரைய ஸ்தானத்தை பார்ப்பதால், தேவையற்ற செலவுகள் குறையும். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். வங்கி மூலம் சிலருக்கு கடன் பெறும் வாய்ப்பு அமையும்.

சிலருக்கு தங்க நகை அடவு போகும். காலத்திற்கு தகுந்தபடி உங்களின் செயல்களை மாற்றி அமைத்துக்கொள்வீர்கள். பெண்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பொருளாதார சிரமம் குறைந்து நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்:

09-06-2024 ஞாயிறு மாலை 04.05 மணி முதல் 11-06-2024 செவ்வாய் இரவு 01.39 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு, ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு அன்று மாலை 04.30 - 06.00 மணிக்கு ராகு காலத்தில் நவகிரகங்களுக்கு ஒன்பது விளக்கில் நல்லெண்ணெயை ஊற்றி, வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் நன்மையை தரும்.

மகரம்

விவேகத்துடன் விரும்பி செயல்படும் மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் தொழில் சார்ந்த அனைத்தும் நல்ல பலன்களைப் பெற்று தரும். உறுதியான சகல காரியங்களையும் தொய்வின்றி செய்வீர்கள். கடந்த கால தேவையற்ற மன உளைச்சல் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். 

விளையாட்டுத்துறையிலும் சமூக சேவையிலும் நன்மதிப்பைப் பெறுவீர்கள். தொழிற்சங்க பணிகளில் முக்கிய பொறுப்பு வகித்து, சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்ப சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வளம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தேவைகள் நிறைவேறும்.

புதிய ஒப்பந்தங்கள் அமையும். வெளியூர் சென்று வருவீர்கள். உங்களின் தொடர் முயற்சிகளால் சகல காரியங்களும் தடையின்றி நடக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைய சில நேரம் கடுமையாக உழைக்க வேண்டி வரும். அரசியலில் உங்களின் பங்களிப்பு சிறப்பாக அமையும். சிலருக்கு நல்ல பதவி கிடைக்கும். சமையல் கலைஞர்களுக்கு தொடர்ந்து புதிய பணி வாய்ப்பு கிடைக்கும். 

வெளிநாடு செல்ல முனைப்புடன் செயல்படுவீர்கள். கப்பல் துறை சார்ந்த பணியில் இருப்பவருக்கு விடுமுறை கிடைத்து குடும்பத்துடன் வந்து இணைய வாய்ப்புகள் அமையும். மீனவர்களுக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும். மாணவர்கள் உயர் கல்விக்கு எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தேவைக்கு ஏற்ப பண வரவு கிடைக்கும். மன அமைதி உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்:

11-06-2024 செவ்வாய் இரவு 01.40 மணி முதல் 14-06-2024 வெள்ளி பகல் 01.00 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென் கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவர் வழிபாடு செய்து செவ்வரளி பூ மாலை நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள அனைத்து காரியங்களும் நற்பலன்களை தரும்.

கும்பம்

நிதானமான செயல்பாடுகளால் வெற்றி பெறும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் சந்திரன் அமர்வதால், சுகஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் அமர்ந்திருப்பதால், அடிக்கடி மன உளைச்சலுடன் உடல் அசதியும் உண்டாகும். மருத்துவமனைக்கு சென்று அனைத்து பரிசோதனைகளும் செய்த பின்பு ஒன்றுமில்லை என்று சொல்வார்கள். ஆனால் உடலில் ஏதோ செய்வது போல உணர்வீர்கள்.

இதை சரி செய்தால் எல்லாம் சரியாகும். பொது வாழ்வில் உங்களின் செயல்பாடுகளால் அனைத்து விடயங்களிலும் முன்னேற்றங்கள் உண்டாகும். அரசியலில் நீங்கள் எடுத்த முடிவு சில நேரம் பாதகமாக அமையும். காரியத்தில் மேன்மையும். கொடுத்த வாக்குறுதிகளால் எதையும் விரைவில் முடிக்க வேண்டுமென்று எண்ணமும் உங்களை துரிதபடுத்தி செயல்பட வைக்கும்.

கலைத்துறையினருக்கு வெளியூர்களில் அடிக்கடி நிகழ்ச்சி இருக்குமென்பதால் வெளியூர் செல்ல வேண்டி வரும். மாணவர்களுக்கு கல்வி, தரம் நல்ல முன்னேற்றம் தரும். சகோதரர்களால் சில விடயம் தடைபட்டாலும் விரைவில் நல்ல முடிவு ஏற்படும். அதிக உழைப்பு இருக்கும். அதற்கான ஊதியம் அமையாது. வாகன வசதிகளைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு புதிய சலுகை கிடைக்கும். அன்றாடம் அழியும் காய்கறி, பழங்களின் தொழில் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு, உங்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமையும். விவசாய பொருட்கள் உற்பத்தி மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள். அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ஆன்மீக தொண்டுகளில் ஈடுபாடு கொள்வீர்கள். தேவைக்கு பணம் வந்து சேரும்.

சந்திராஷ்டம நாட்கள்:

14-06-2024 வெள்ளி பகல் 01.01 மணி முதல் 16-06-2024 ஞாயிறு இரவு 12.38 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும், சுப்ரமணியருக்கு நெய் தீபமும் ஏற்றி, வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வெற்றியைத் தரும்.

மீனம்

மன உறுதியுடன் செயற்படும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் சகல காரியங்களையும் அனுகூலமாக்குவார். ஏழரை சனி விரைய சனியாக செயற்படுவதால், தேவையற்ற விரயம் உண்டாகும் என்பதால், இந்த காலத்தில் தேவையற்ற செலவுகளை குறைத்து, அத்தியாவசிய செலவுகளை செய்வது நல்லது. வீடு கட்டுதல், புதிய வீடு வாங்குதல், திருமண காரியம் செய்வதன் மூலம் சுப விரையமாக அமையும்.

அறிவியல் ஆராய்ச்சி துறையினருக்கு புதிய கண்டுபிடிப்புகளால் நல்ல முன்னேற்றம் அமையும். உங்களின் கௌரவத்தை தக்க வைத்துக்கொள்வீர்கள். எதிலும் உங்களின் பங்கு இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். குறைந்த முதலீடுகளில் சிறு தொழில் செய்பவருக்கு வருமானம் இருக்கும். அதிக முதலீடு சில நேரம் தடைப்பட்டிருக்கும்.

அரசியலிலும் பொது வாழ்விலும் அதிக ஆர்வமில்லாத சூழ்நிலை உண்டாகும். இசை கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். கலைத்துறைக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது.

ஆன்மிக தொண்டுகளில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உடல்நலனின் அடிக்கடி கவனத்துக்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உயர் கல்வி கற்பதான வாய்ப்புகள் அமையும். தர்ம காரியங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உங்களின் எண்ணங்களை செயற்படுத்தி தேவையான அனைத்து பணிகளையும் துரிதமாக செயற்படுத்துவீர்கள். தேவைக்கு தகுந்த பண வரவு இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

16-06-2024 ஞாயிறு இரவு 12.39 மணி முதல் 19-06-2024 புதன் காலை 10.56 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், திங்கள், செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கு வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் செலுத்தி, வழிபாடு செய்து வர சகல காரியங்களும் வெற்றியை தரும்.

(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப பலன்களை அள்ளித்தரும் சந்திர கேந்திரங்கள்...!?

2024-07-15 16:58:28
news-image

காரிய வெற்றியை அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்த...

2024-07-13 16:04:21
news-image

சித்தர்களின் ஆசியையும் அருளையும் பெறுவதற்கு எளிய...

2024-07-11 17:36:37
news-image

சந்திராஷ்டமத்தைக் கண்டு பயம் கொள்ளலாமா...?!

2024-07-10 17:50:31
news-image

அன்ன தோஷத்தை அகற்றும் நந்தி பகவான்...

2024-07-09 17:55:38
news-image

கண்களின் கர்மாவை அகற்றும் எளிய பரிகாரம்..!?

2024-07-06 18:20:54
news-image

கும்பத்தின் மீது தேங்காய் வைப்பதன் பின்னணி...

2024-07-05 17:09:04
news-image

பண வரவை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறைகள்...!?

2024-07-04 16:37:48
news-image

செல்வ வளத்தை அள்ளி வழங்கும் கோதூளி...

2024-07-03 16:50:28
news-image

அயலகத்தில் வாழ்பவர்கள் குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான...

2024-07-02 23:38:29
news-image

உங்களின் செல்வ நிலையை உயர்த்தும் ஆருடா...

2024-07-01 19:31:15
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான எளிய...

2024-06-29 16:35:07