முக வீக்க பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

30 May, 2024 | 05:29 PM
image

எம்மில் சிலருக்கு அவர்களுடைய முகம் இயல்பான நிலையை விட சற்று வீக்கம் அடைந்து காணப்படும். சிலர் இதனை காலையில் எழுந்ததும் கண்ணாடியை பார்ப்பதன் மூலம் அறிந்து கொண்டு பதற்றம் அடைவர்.

வேறு சிலர் இது ஏதேனும் நோயின் அறிகுறி என்பதனை உணர்ந்து உடனடியாக அருகாமையில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவர்.

இந்நிலையில் முக வீக்க பாதிப்பிற்கு தற்போது பல்வேறு வகையினதான நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

முக வீக்கம் என்பது பல நோய்கள் மற்றும் அவற்றின் நிலை காரணமாக ஏற்படக்கூடிய அறிகுறியாகும். சிலருக்கு பூச்சிக்கடியினால் இத்தகைய முக வீக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

சிலருக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பின் காரணமாக முக வீக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும். முக வீக்கம் ஏற்பட்டவுடன் வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்கான சிகிச்சையை பெற வேண்டும்.

முகத்தில் தொடர் நமைச்சல், இறுக்கம், வீக்கம், சிவந்து காணப்படுவது, கண்களை இயக்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவை  முக வீக்கத்திற்கான அறிகுறியாக எடுத்துக்கொண்டு, உடனடியாக வைத்தியர்களை சந்திக்க வேண்டும்.

உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கும் ஆரோக்கியமான ஆழ்ந்த உறக்கம் இல்லை என்றாலும், இயல்பான அளவை விட கூடுதலாக உறங்கினாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.  உப்பின் அளவை இயல்பான அளவைவிட கூடுதலாக எடுத்துக் கொண்டாலும் முக வீக்கம் ஏற்படும். 

வலி நிவாரணிக்கான மருந்து மாத்திரைகளின் பக்க விளைவு , தொற்று பாதிப்பு, ஒவ்வாமை,  பல் சிகிச்சை, முக சிகிச்சை, கழுத்து மற்றும் தலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சை, விபத்து, பேறு காலம், ஹைபோதைரொய்ட் பாதிப்பு, தலைவலி, கடும் ஊட்டச்சத்து குறைபாடு என பல்வேறு காரணங்களால் முக வீக்க பாதிப்பு ஏற்படக்கூடும்.

மேலும் சில புற்றுநோய் சிகிச்சைகளின் காரணமாகவும் குறிப்பாக கீமோதெரபி மற்றும் இம்யூனோ தெரபி போன்றவற்றின் காரணமாகவும் முக வீக்கம் ஏற்படக்கூடும்.

ஒவ்வாமை குறித்த பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர்.

இதனுடன் ஐஸ் பேக் ஒத்தடம், இயல்பான அளவை விட சற்று கூடுதலாக குடிநீர் அருந்துவது,  பிரத்யேக உடற்பயிற்சி, லிம்படிக் டிரைனேஜ் எனும் சிகிச்சை, டையூரிடிக் மருந்தியல் சிகிச்சை ஆகிய சிகிச்சைகளை மேற்கொண்டும் முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.

வைத்தியர் அனந்த கிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12
news-image

நான்ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் எனும் கொழுப்பு கல்லீரல்...

2024-07-05 00:50:06
news-image

ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை...

2024-07-03 15:25:15
news-image

பிராங்கியாடிஸிஸ் எனும் மூச்சு குழாய் தளர்வு...

2024-07-02 23:38:44
news-image

உடல் எடை குறைப்பதற்கான நவீன சிகிச்சை

2024-07-01 19:29:59
news-image

மருந்துகளின் பக்க விளைவுப் பாதிப்புக்கும் சிகிச்சை

2024-06-29 16:15:38
news-image

ஹைட்ரோகெபாலஸ் எனும் மூளையில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-06-28 17:55:25
news-image

குருதியில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்த...

2024-06-28 14:20:41
news-image

குமட்டல் உணர்வு, வாந்திக்கு சிகிச்சை எடுக்க...

2024-06-26 17:45:16