மண்வெட்டியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பலோகம, கன்திரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 6 ஆம் திகதி தனது வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருக்கும் போது சந்தேக நபரான மனைவி இவரை மண்வெட்டியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து காயமடைந்தவர் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இவர் கடந்த 24 ஆம் திகதி மீண்டும் கெக்கிராவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மகளின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேக நபரான 59 வயதுடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM