காசா எகிப்திய எல்லையில் முக்கிய பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல் - காசாவின் முழு நிலப்பரப்பும் இஸ்ரேலின் பிடியில்

30 May, 2024 | 11:33 AM
image

எகிப்தின் எல்லையில் ஒரு சிறிய பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து காசாவின் முழு நிலப்பரப்பும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

இஸ்ரேலிய படையினர்  குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காசா பள்ளத்தாக்கிற்கும் எகிப்திற்கும் இடையில் உள்ள 14 கிலோமீற்றர் நீளமான பிலாடெல்பி கொறிடோரை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலின் தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்த பகுதி மாத்திரமே இஸ்ரேலின் நேரடிகட்டுப்பாட்டின் கீழ் இல்லாமலிருந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியே ஹமாசிற்கான உயிர்நாடியாக விளங்கியது காசாவிற்குள் ஆயுதங்களை கொண்டுவருவதற்கு ஹமாஸ் இந்த பகுதியை பயன்படுத்தியது என தெரிவித்துள்ளஇஸ்ரேலின் தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி 20 சுரங்கப்பாதைகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தனது ரபா தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக எகிப்திய எல்லையில் சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கின்றது என எகிப்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான...

2024-07-19 22:13:25
news-image

தகவல்தொழில்நுட்ப செயல் இழப்பு: சென்னையில் விமான...

2024-07-19 17:26:58
news-image

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த...

2024-07-19 15:20:38
news-image

தகவல்தொழில்நுட்ப செயல் இழப்பு - ஐரோப்பாவில்...

2024-07-19 15:13:12
news-image

கொலைக்களமாக மாறும் தமிழகம்; 200 நாட்களில்...

2024-07-19 14:46:25
news-image

பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு- சர்வதேச அளவில்...

2024-07-19 13:11:28
news-image

ஊடகங்கள் எனது தாத்தாவை வேறுவிதமாக சித்தரிக்கின்றன...

2024-07-19 12:41:32
news-image

இஸ்ரேலிய தலைநகரில் அமெரிக்க தூதரகத்தின் கிளை...

2024-07-19 10:44:48
news-image

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

2024-07-19 10:31:16
news-image

பங்களாதேசில் வன்முறை தொடர்கின்றது – அரச...

2024-07-18 23:05:54
news-image

சவூதி அரேபிய அரசு, UpLink இணைந்து...

2024-07-18 17:11:17
news-image

வங்கதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு தூதரகம்...

2024-07-18 17:21:28