மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் - யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கு மாகாண ஆளுநர்

Published By: Vishnu

30 May, 2024 | 02:31 AM
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு 29 ஆம் திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்,

“மருத்துவ துறையினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் சேவையை முன்னெடுத்து வருகின்றனர். அதேபோல சுகாதார அமைச்சின் செலவுகளுக்கே அதிகளவான நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.

இடப்பற்றாகுறை, கட்டட வசதியின்மை, ஆளணி பற்றாகுறை உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு மத்தியிலேயே சேவைகளை வழங்க வேண்டியுள்ளது. எனினும் மாகாணத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து, வார இறுதி நாட்களில் நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதால் வைத்தியசாலை நிருவாகம் மேலதிக செலவுகளை சந்திக்க வேண்டியுள்ளது.

அந்தந்த பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு இயலுமான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். இதன்காரணமாக நோயாளர்களும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் அவர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களும் சிரமப்படுகின்றனர். ஆகவே இந்த விடயம் தொடர்பில் மாகாண சுகாதார துறை நிர்வாகம் மிக இறுக்கமான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

அதேபோல அரச நிறுவனங்களுக்குள் எவரும் அத்துமீறி பிரவேசிக்க முடியாது. இது தண்டனைக்குரிய குற்றம். நேற்று முன்தினம் யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குறைகள் உரியவாறு சுட்டிக்காட்டப்பட வேண்டும். அந்த விடயங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

அத்துடன்  ஊடகங்களும் எங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கான சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். சிறந்த நண்பர்களாக எங்களுடன் ஊடகங்கள் பயணிக்கும் என நம்புகின்றேன்.” என கருத்து தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2024-06-23 19:24:45
news-image

'இளைஞர்களின் எழுச்சி' தொனிப்பொருளில் கண்டியில் இளைஞர்...

2024-06-23 19:16:51
news-image

மட்டக்களப்பு - பூனொச்சிமுனையில் மீன்பிடி படகு...

2024-06-23 19:57:32
news-image

நெடுந்தீவு இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களை...

2024-06-23 19:22:22
news-image

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் :...

2024-06-23 19:18:00
news-image

மாணவனைத் தாக்கிய சம்பவத்தில் ஒரே பாடசாலையில்...

2024-06-23 19:38:52
news-image

யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கொழும்பு சிறுவன்...

2024-06-23 19:19:24
news-image

பொலிசாரின் சன்மான பணத்தை மோசடி செய்த...

2024-06-23 19:34:03
news-image

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரின்...

2024-06-23 19:13:36
news-image

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு...

2024-06-23 17:56:58
news-image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும்...

2024-06-23 17:41:47
news-image

விவசாயிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும்...

2024-06-23 17:35:46