தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தின் கதையின் எரியும் நினைவுகள் என்னும் கருப்பொருளில் ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும் யாழ்ப்பாண பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் 29ஆம் திகதி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கதையின் எரியும் நினைவுகள் என்னும் கருப்பொருளில் ஆவணப்படத் திரைப்படத்தினை இயக்குநர் ப.சோமிதரன் இயக்கியுள்ளார்.
இவ் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண பல்கலைக் கழக கலைப்பீட பீடாதிபதி ம.ரகுராம், தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம.இராதையன், இலக்கியவாதிகள், தமிழ் சிவில் சமூக இளைஞர், யுவதிப் பிரதிநிதிகள், சான்றோர்கள், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதில் 1981 ம் ஆண்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்ட போதும், ஏற்பட்ட அழிப்பு மற்றும் ஊரடங்கு சட்டத்தின் போது அங்குள்ள கடைத்தொகுதிகள் அழிப்பும், கறுப்பு ஜூலை தொடர்பாகவும், பொதுமக்களின் இடப்பெயர்வுகளும் அழிவுகளும் தொடர்பான ஆவணபட மாக்கல் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களும் கேட்டறிந்து கலந்துரையாடப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM