(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா றக்பி, இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம், உட்பட நான்கு விளையாட்டுத்துறை சங்கங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா றக்பி (இலங்கை றக்பி நிறுவனம்), இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம், இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம், சிலோன் ஒட்டோமொபைல் சங்கம் ஆகிய நான்கு சங்கங்களுக்கு இன்று 29ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த நான்கு சங்கங்களுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தை தகுதிவாய்ந்த அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.
அமைச்சரின் இந்த உத்தரவுக்கு அமைய குறிப்பிட்ட நான்கு சங்கங்களினதும் தேர்தல்கள் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்நாயகத்தினால் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM