டயலொக்   றக்பி போட்டிகளில் விளையாடும் பாடசாலை வீரர்களுக்கு காப்புறுதித் திட்டம்; ஸ்ரீலங்கா கிரிக்கெட் உதவியுடன் புதிய தேசிய றக்பி திட்டம் - அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

Published By: Vishnu

29 May, 2024 | 11:58 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் டயலொக்   பாடசாலைகள் றக்பி லீக்  போட்டிகளில் பங்குபற்றும் ஒவ்வொரு வீரருக்கும்  காப்புறுதித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் 2024 போட்டிகள் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் புதன்கிழமை (29) பிற்கபல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பின்போது டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் 2024 போட்டிக்கான அனுசரணை உதவுத் தொகையை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயன்த ஆகியோர் முன்னிலையில் இலங்கை பாடசாலகள் றக்பி சங்கத் தலைவர் கமல் ஆரியசிங்கவிடம் டயலொக் ஆசியாட்டா குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசன்த தேவரப்பெரும கையளித்தார். டயலொக் ஆசியாட்டா குழுமத்தின் சந்தைப்படுத்தல் வர்த்தக நாமம் மற்றும் ஊடகப்பிரிவு உதவித் தலைவர் ஹர்ஷ சமரநாயக்கவும் பிரசன்னமாகியிருந்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர்,

'றக்பி போட்டிகளில் விளையாடும் பாடசாலை வீரர்களுக்கு சுகாதார அமைச்சுடன் இணைந்து காப்புறுதித் திட்டம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி அமைச்சும் விளையாட்டுத்துறை அமைச்சம் இலங்கை பாடசாலைகள் றக்பிகால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாடசாலைகள் றக்பி போட்டி ஒன்றின்போது பாடசாலை வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக அவர் பார்வை இழந்தார். அவருக்கு உதவ எந்தவொரு சங்கமும் முன்வராதது துரதிர்ஷ்டமாகும். அவருக்கு இந்தியாவில் சிகிச்சை செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் சாத்தியப்படவில்லை. எனவே பாடசாலை வீரர்களின் உயிர்பாதுகாப்பு மற்றும் அவர்களது நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த வருட றக்பி போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் காப்புறுதித் திட்டம் ஆரம்பிக்கப்படும்' என்றார்.

விளையாட்டுத்துறைக்கு குறிப்பாக பாடசாலை றக்பிக்கு

டயலொக் வழங்கும் அனுசரணை அதிர்ஷ்டவசமானது

இலங்கை விளையாட்டுத்துறையில் குறிப்பாக பாடசாலைகள் றக்பி விளையாட்டின் வளர்ச்சிக்கு டயலொக் ஆசிஆட்டா அனுசரணை வழங்குவது அதிர்ஷ்டவசமானதும் பாராட்டுக்குரியதுமாகும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

'இலங்கையில் பாடசாலைகள் றக்பி சிறப்பாக நடைபெறுவதற்கு டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் வழங்கும் அனுசரணையே காரணமாகும். அது இலங்கை பாடசாலைகள் றக்பிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். அந்த நிறுவனம் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றிவருகிறது. குறிப்பாக பாடசாலைகள் றக்பிக்கு அந்த நிறுவனம் வழங்கும் அனுசரணை பாராட்டுக்குரிதாகும்.

'பெரும்பாலான பாடசாலைகளில் மைதான வசதிகள் இல்லை. இலங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சினால் காலி, மாத்தறை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் உட்பட ஏனைய மாவட்டங்களில் 12 அல்லது 14 விளையாட்டரங்குகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  ஆனால், அவை முறையாக நிருவகிக்க படுவதும் இல்லை, பராமரிக்கப்படுவதும் இல்லை.  அவை   சுகததாச விளையாட்டுத்துறை திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு நிருவகிக்கப்படும். சகல பாடசாலைகளும் இந்த விளையாட்டரங்குகளை பயிற்சிக்கும் போட்டிகளை நடத்துவதற்கும் பயன்படுத்த அனுமதிக்கப்படும். போகம்பறை விளையாட்டரங்கு, சீ.ஆர். அண்ட் எவ்.சி. ஆகிய மைதானங்களில் பேரொளி மின்விளக்கு கம்பங்கள் பொருத்தப்படவுள்ளது' என்றார்.

தேசிய றக்பி திட்டத்திற்கு எஸ்எல்சி ஆதரவு

தேசிய றக்பி விளையாட்டின் மேம்பாட்டிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உதவ முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

'ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் தேசிய றக்பி மேம்பாட்டிற்கான உறுதியான புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும். இதன் மூலம் பகுதியளவு தொழில்முறை சம்பளம் வீரர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் தேசிய றக்பி அணி வருடந்தோறும் 5 சர்வதேச றக்பி சுற்றுப் பயணங்களில் பங்குபற்றும். வெளிநாடுகளில் 3 றக்பி சுற்றுப் பயணப் போட்டிகளில் இலங்கை பங்குபற்றும். அதேபோன்று இலங்கைக்கு 2 வெளிநாட்டு அணிகள் வருகை தந்து தேசிய அணியுடன் விளையாடும்' எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06