முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதி விபத்து; 03 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் பலி

Published By: Vishnu

29 May, 2024 | 08:36 PM
image

பெல்மடுல்ல பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வீதியை விட்டு விலகிய முச்சக்கரவண்டி 15 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் உட்பட மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பெல்மடுல்ல, கஹவத்த மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் பலத்த காயமடைந்த பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஏறக்குறைய 03 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவர்களின் சடலங்கள் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன்...

2024-06-17 17:59:41
news-image

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2024-06-17 17:59:10
news-image

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த...

2024-06-17 17:28:31
news-image

யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை...

2024-06-17 17:23:48
news-image

பதியத்தலாவயில் வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு...

2024-06-17 17:23:24
news-image

நீர் குழாயில் வெடிப்பு : நள்ளிரவுக்குள்...

2024-06-17 16:36:53
news-image

75 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கொழும்பில்...

2024-06-17 16:44:36
news-image

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புதிய ரயில்...

2024-06-17 17:19:50
news-image

மாத்தளையில் நாளை நீர் வெட்டு

2024-06-17 15:49:35
news-image

களுத்துறையில் இளைஞர் கடத்தல் ; பொலிஸார்...

2024-06-17 15:25:46
news-image

சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி...

2024-06-17 15:42:54
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களுடைய பூர்வீக காணிகள்...

2024-06-17 14:46:36