தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்- சிம்மம்..!?

Published By: Digital Desk 7

29 May, 2024 | 05:41 PM
image

'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்: கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற ஆன்றோர் வாக்கிற்கு ஏற்ப தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு, அதையே முதலீடாக்கி, கடுமையாக உழைத்து, வாழ்வில் தொழிலதிபராக உயர்ந்தவர் பலர். தொழில் என்று வந்துவிட்டால் ஏற்றமும் உண்டு. இறக்கமும் உண்டு என்பது தெரிந்த விடயம் தான் என்றாலும், சிலரால் சில எல்லை வரையிலான இறங்கு முகத்தைத்தான் தாங்குவார்கள். அதனிலும் கீழாக தொழில் வீழ்ந்து விட்டால் அதிலிருந்து மீண்டு மேலே எழும்பி வருவதற்கான வலிமையை ஒரு எல்லைக்கு மேல் இழந்து விடுவர்.

இந்தத் தருணத்தில் அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் காரணமாகவோ அல்லது சூழல் காரணமாகவோ அல்லது நஷ்டத்தின் சுமை காரணமாகவோ தொழிலிலிருந்து விலகி விடவோ ஓய்வு பெறவோ தான் விரும்புவர். ஆனால் ஒரு தொழிலில் ஈடுபட்டு, நஷ்டம் ஏற்பட்டிருக்கும் தருணத்தில் அதிலிருந்து விலகினால் உங்கள் மனமே உங்களுக்கு எதிரி ஆகி விடும். இதுபோன்ற தருணங்களில் தொழிலில் நஷ்டத்தையும், வாழ்க்கையில் கஷ்டத்தையும் சந்திப்பவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.

உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி சிம்ம ராசியில் இருந்தால். உதாரணமாக நீங்கள் மிதுன லக்னமாக இருக்கிறீர்கள் என்றால், உங்களுடைய பத்தாம் இடமான மீன வீட்டின் அதிபதியான குரு உங்களுடைய ராசி கட்டத்தில் சிம்ம ராசியில் இருந்தால்  நீங்கள் எம் மாதிரியான பரிகாரங்களை மேற்கொண்டு தொழிலில் ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை சரிகட்டி மீண்டும் லாபகரமான பாதைக்கு திரும்பலாம் என்பதற்கு எம்முடைய முன்னோர்கள் சில எளிய பரிகாரங்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.

செம்பு என்ற உலகத்தினாலான டொலர் ஒன்றை அல்லது தங்கத்தாலான டொலர் ஒன்றை கழுத்தில் அணிந்து கொண்டால் அவை உங்களுக்கான செல்வ நிலையை மேம்படுத்தும்.‌

அதே தருணத்தில் உங்களுக்கு யாரேனும் ஒரு பொருளை தானமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் வழங்கினாலோ அதிலிருந்து சிறிதளவு பொருளை எடுத்து மற்றவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

நீங்க எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் உங்களது பேச்சில் நேர்மை இருக்க வேண்டும். சிறிதளவு பொய்யை கலந்து பேசினாலோ அல்லது உண்மையை மறைத்து பேசினாலோ அதனாலேயே உங்களுக்கு தொழிலில்  சிக்கல் உருவாகும்.

அருகில் உள்ள சிறிய ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என தெரிய வந்தால் அந்த ஆலயங்களுக்கு நீங்களாகவே சென்று அன்னதானத்திற்கான அரிசியை உங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் தானமாக வழங்க வேண்டும். இவை உங்களுக்கு மறைமுகமான லாபத்தை அள்ளி அள்ளி தரும்.

மது அருந்துவர்களாக இருந்தாலும் மாமிசம் சாப்பிடுவர்களாக இருந்தாலும் அந்த இரண்டு பழக்கத்தையும் முற்றாக கைவிட்டு விடுங்கள். விருந்து, சுப நிகழ்வு போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றி கட்டாயமாக பசியாற வேண்டிய சூழல் ஏற்பட்டு, நீங்கள் சிறிதளவு இதனை சாப்பிட்டாலும் அதற்கேற்ற அளவில் உங்களுடைய தொழிலில் பிரச்சனைகளும், மறைமுக போட்டியாளர்களும் உருவாகுவார்கள். அதனால் மதுவையும், மாமிசத்தையும் கைவிடுவதுதான் தொழிலில் முன்னேறுவதற்கான சிறந்த வழி.

நீங்கள் தொழில் தொடங்கிய நாள் அல்லது உங்களுடைய பிறந்த ஜென்ம நட்சத்திரம் அல்லது நீங்கள் பிறந்த கிழமை இந்த நாட்களில் குறைந்த பட்சம் பத்து கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்பை வாங்கி தானமாக வழங்க வேண்டும். இதன் மூலம் திடீரென்று உங்களுடைய தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்தும், சிக்கல்களில் இருந்தும் விடுபட்டு வளர்ச்சி மேம்படுவதை காணலாம்.

தொழில் சம்பந்தமான முக்கியமான பிரமுகர்களை சந்திக்கும் போது அல்லது தொழில் தொடர்பான ஒப்பந்தங்களை பெறுவது தொடர்பான முக்கிய  பிரமுகர்களுடனான நேர்காணல் மேற்கொள்வதற்கு முன் சிறிதளவு உணவருந்தி விட்டுச் செல்லுங்கள். அவை நொறுக்கு தீனியாகவும் இருக்கலாம். சத்தான பழச்சாறாகவும் இருக்கலாம் அல்லது உங்களது உங்களுக்கு பிடித்த உணவாகவும் இருக்கலாம். ஏதேனும் ஒன்றை பசியாறி விட்டுச் செல்லுங்கள். இதைப் புறக்கணித்தோ அல்லது அலட்சியப்படுத்தியோ சந்திப்பில் பங்கு பற்றினால் அந்த தருணத்தில் நீங்கள் பேச வேண்டிய பொருத்தமான சொல்லாடல்கள் கிடைக்காமல் தவிக்கக் கூடும் அல்லது நீங்கள் பேசும் சொற்களுக்கு கிடைக்க வேண்டிய வலிமை கிடைக்காமல் போகக்கூடும் வேறு சிலருக்கு அவர்கள் நினைத்த விடயத்தை எதிராளிகளுக்கு புரியும் வகையிலான சொற்களை பயன்படுத்தி பேசுவதில் தடை ஏற்படும்.

அதே தருணத்தில் சிறிதளவு உணவருந்தி விட்டு சென்றால் நீங்கள் நினைத்ததை அவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் எளிதாகப் பேசி பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்து ஒப்பந்தங்களை பெற்று தொழிலில் முன்னேறுவீர்கள். வேறு சிலருக்கு நேர்காணலின்போது திடீரென்று எடுக்க வேண்டிய அவசர முடிவுகளில் உணவருந்தி சென்றால் அதில் ஒரு உறுதித் தன்மை ஏற்படும். உணவருந்தாமல் சென்றால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியில் உங்களுக்கே சந்தேகம் ஏற்படும். தொழில் முறையிலான சந்திப்பின்போது உணவருந்தி விட்டு செல்வதுதான் வெற்றியைத் தரும்.

உங்களை விட வயதில் மூத்தவர்களையும், அனுபவத்தில் வல்லவர்களையும் வயதிற்குரிய மரியாதையை வழங்கி அதாவது பொன்னாடை போர்த்துவது நினைவு பரிசினை வழங்குவது போன்றவற்றை பணிவாக கையாளும்போது உங்களின் மதிப்பு உயர்வதுடன் அது தொழிலில் முன்னேற்றத்தையும் உண்டாக்கும்.

உங்களுடைய ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் லக்னத்திலிருந்து பத்தாம் இடத்தின் அதிபதி ராசி கட்டத்தில் சிம்ம வீட்டிலோ சிம்ம ராசியிலோ இருந்தால் மேலே சொன்ன பரிகாரங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது தொழிலில் வெற்றி பெற்று சிறந்த தொழிலதிபவர்களாக உயர முடியும்.

தொகுப்பு சுபயோக தாசன்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வணிகம் பெருக மேற்கொள்ள வேண்டிய எளிய...

2024-09-17 15:23:32
news-image

கல்வியில் தடையை அகற்றும் இறை வழிபாட்டுப்...

2024-09-17 09:34:38
news-image

முன்னோர்களின் ஆசியை பரிபூரணமாக பெறுவதற்கு செய்ய...

2024-09-14 16:38:56
news-image

கடன் பிரச்சினை தீர்வதற்கான பண வரவிற்குரிய...

2024-09-14 16:38:22
news-image

வெற்றி பெறுவதற்கான நட்சத்திர சூட்சமம்...!?

2024-09-12 16:40:45
news-image

கண்டாந்திர நட்சத்திர தோஷமும், பரிகாரமும்

2024-09-11 17:16:39
news-image

தலைமுறை பாவங்களை நீக்கும் மந்திர உச்சாடன...

2024-09-10 14:45:36
news-image

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..?

2024-09-09 15:57:29
news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29