பெட்ஸோர்ஸ் எனும் தோலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

29 May, 2024 | 05:38 PM
image

எதிர்பாராத விதமாக நடைபெறும் விபத்தில் சிக்குபவர்கள் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற பின் அவர்கள் முழுமையாக குணமடையும் வரை படுக்கையிலேயே சிகிச்சை பெற வேண்டியதிருக்கும். இதனால் இயல்பான அளவை விட கூடுதலாக அழுத்தம் ஏற்படுவதால் தோலிலும், தோலின் கீழ் பாகத்திலும் காயங்கள்  ஏற்படுகிறது. இதனை மருத்துவ மொழியில் பெட்ஸோர்ஸ் எனக் குறிப்பிடுகிறார்கள். இதற்கு உரிய முறையில் சிகிச்சை பெறாவிட்டால் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நீண்ட கால அழுத்தம் காரணமாக உடலின் எலும்பு பகுதிகளான குதிகால், இடுப்பு, தண்டுவடத்தின் இறுதி எலும்பு பகுதி  ஆகிய பாகங்களில் உள்ள தோல் மற்றும் திசுக்களில் திடீர் வெடிப்பு ஏற்படும். படுக்கை புண்கள் அல்லது அழுத்தப் புண்கள் என குறிப்பிடப்படும் இத்தகைய பாதிப்பிற்கு படுக்கையில் நீண்ட நேரமாக ஒரே நிலையில் உறங்கினாலோ அமர்ந்திருந்தாலோ இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய தருணங்களில் எம்முடைய உடலில் இயல்பாக நடைபெற வேண்டிய ரத்த ஓட்டம் குறைகிறது. மேலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் படுக்கையில் அதிக நேரத்தை செலவிடுவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

பொதுவாக வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இத்தகைய பெட்ஸோர்ஸ் எனப்படும் அழுத்த புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் இவர்கள் இத்தகைய தோல் பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தோலில் நிற மாற்றம், தோலில் புண், வீக்கம், உணர்திறன் குறைவு, சீழ் வடிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்  உடனடியாக வைத்திய நிபுணரை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

தோலிற்கு இயல்பான அளவை விட கூடுதலான அழுத்தம் ஏற்படுவதாலும், ரத்த ஓட்டம் திசுக்களுக்கு இயல்பான அளவை விட குறைவதாலும், உராய்வு தன்மையினாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.

இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் தோல் புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பாரிய விளைவுகளை உண்டாக்க கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதன்போது மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை மற்றும் தோலுக்கான திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மைகள் துல்லியமாக அவதானிப்பர். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இதனுடன் இயன்முறை சிகிச்சையையும் வழங்கி நிவாரணத்தை அளிப்பர். சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாகப் பின்பற்றினால் இத்தகைய பாதிப்பை முழுமையாக ஆயுள் முழுவதும் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.

வைத்தியர் தீப்தி
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12
news-image

நான்ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் எனும் கொழுப்பு கல்லீரல்...

2024-07-05 00:50:06
news-image

ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை...

2024-07-03 15:25:15
news-image

பிராங்கியாடிஸிஸ் எனும் மூச்சு குழாய் தளர்வு...

2024-07-02 23:38:44
news-image

உடல் எடை குறைப்பதற்கான நவீன சிகிச்சை

2024-07-01 19:29:59
news-image

மருந்துகளின் பக்க விளைவுப் பாதிப்புக்கும் சிகிச்சை

2024-06-29 16:15:38
news-image

ஹைட்ரோகெபாலஸ் எனும் மூளையில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-06-28 17:55:25
news-image

குருதியில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்த...

2024-06-28 14:20:41