மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும் 2' படத்தின் புதிய பாடல் வெளியீடு

Published By: Digital Desk 7

29 May, 2024 | 05:32 PM
image

நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2 ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'பேட் பாய்ஸ் மிஷன்' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சூது கவ்வும் 2' எனும் திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா,  ராதாரவி, கருணாகரன், எம். எஸ். பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரகு, அருள் தாஸ், கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே. தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்திருக்கிறார்.  இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 'பேட் பாய்ஸ் மிஷன்..' எனும் புதிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்தப் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் எட்வின். மேலத்தேய இசை வகையினதாள லயத்துடன் வெளியாகி இருக்கும் இந்த பாடல் இணைய தலைமுறையினரிடத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right