புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடித்திருக்கும் 'வெப்பன்' திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 7

29 May, 2024 | 05:22 PM
image

தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, நாற்பத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் சத்யராஜ்.. இன்றும் பரபரப்பான நடிகராகவே செயல்பட்டு வருகிறார். தற்போது கூட சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கூலி' எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.‌ இந்தத் தருணத்தில் அவர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'வெப்பன்' எனும் திரைப்படம் ஜூன் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வெப்பன்' எனும் திரைப்படத்தில் 'புரட்சித் தமிழன்' சத்யராஜ், 'இளந் தமிழன்' வசந்த் ரவி, ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா, வினோதினி, வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார்.‌ ஆயுதங்களைப் பற்றிய பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். எஸ். மன்சூர் தயாரித்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மே மாதம் 31 ஆம் திகதியன்று இத்திரைப்படம் வெளியாகும் என முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. போதிய பட மாளிகைகளும், காட்சிகளும் கிடைக்காததன் காரணமாக இந்தத் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. அதற்கு பதிலாக 'வெப்பன்' திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஏழாம் திகதியன்று படமாளிகையில் வெளியாகும் என பிரத்யேகப் புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே 'வேட்டையன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் வசந்த் ரவி நடிக்கும் 'வெப்பன்' திரைப்படத்திற்கு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right