அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2- தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Published By: Digital Desk 7

29 May, 2024 | 04:58 PM
image

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தின் மூலம் பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்தார். அவர் நடிப்பில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2- தி ரூல்' எனும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ரஷ்மிகா மந்தானா, தனஞ்ஜெயா, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா பரத்வாஜ், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'சூடான ..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வெளியான இரண்டு மணி தியாலத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'அட ஊரெல்லாம் இவ முரட்டுக்காள.. என் முன்னால ஒரு பச்ச பாலகன போல .. ' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத, பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.‌  மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் இளைய சமுதாயத்தினரையும், இணைய தலைமுறையினரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right