சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 171 குடும்பங்கள் பாதிப்பு

Published By: Digital Desk 3

29 May, 2024 | 04:43 PM
image

மலையகத்தில் நிலவும் கன மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இந்த சீரற்ற காலநிலை காரணமாக  நுவரெலியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக நுவரெலியா  மாவட்டத்தில் 159 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

அதன்படி, வலப்பனை பிரதேச செயலக பிரிவில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 195 பேரும், நுவரெலியா பிரதேச செயலக  பிரிவில்  9 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரும், ஹங்குரான்கெத்த பிரதேச செயலக பிரிவில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 136 பேரும், கொத்மலை பிரதேச செயலக  பிரிவில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில்  தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை சிறிய பாதிப்புக்கள்  ஏற்பட்ட குடியிருப்புக்களைச்  சேர்ந்த சிலர் அதனை தற்காலிகமாக திருத்திக்கொண்டு அதே குடியிருப்புகளில் தங்கியுள்ளனர்.

வலப்பனை பிரதேச செயலக பிரிவில் 40 வீடுகளும், நுவரெலியா பிரதேச செயலக பிரிவில் 9 வீடுகளும், ஹங்குரான்கெத்த  பிரதேச செயலக பிரிவில் 39 வீடுகளும், கொத்மலை பிரதேச செயலக பிரிவில் 71 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்களை  கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறு  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு  நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட பணிப்புரை விடுத்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36
news-image

யாழ். பொலிஸ் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்...

2025-03-17 20:36:16
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையால் அமைதியற்ற நிலைமை...

2025-03-17 16:59:50
news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19