தேர்தலை பிற்போடவேண்டுமென்பது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு அல்ல - சமன் ரத்னப்பிரிய

Published By: Digital Desk 7

29 May, 2024 | 04:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேர்தலை பிற்போடுவது குறிபத்து ஐக்கிய தேசிய  எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. தேர்தலை பிற்போடவேண்டும் என்ற யோசனை ரங்கே பண்டாரவின் தனிப்பட்ட கருத்து என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகமும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற  தேர்தலை இரண்டு வருடங்களுக்கு பிற்பாேடவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்திருந்த விடயம் அவரது தனிப்பட்ட கருத்து.

அது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு அல்ல. அவ்வாறான எந்த தீர்மானத்தையும் ஐக்கிய தேசிய கட்சி மேற்கொள்ளவில்லை.

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ந்துள்ள நிலையில், தேர்தல் ஒன்று அவசியம் இல்லை எனவும் மேலும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் ஒன்றை நடத்தாமல் முன்னோக்கிச் செல்ல முடியும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். 

வர்த்தகர்களும்  தேர்தல் ஒன்று தேவையில்லை என்ற  நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். அதேபோன்று ஜனாதிபதியை சந்திக்கும் பலரும் இந்த நிலைப்பாட்டையே தெரிவித்துள்ளனர்.எனினும் கட்சி என்ற ரீதியில் தேர்தலை பிற்போடுவது சம்பந்தமான எந்த தீர்மாளத்தையும் எடுக்கவில்லை. ஜனாதிபதியும் அவ்வாறானதொரு எண்ணத்தில் இல்லை.

அரசியலமைப்பின் பிரகாரம்  இந்த வருடம் செப்டெம்பர் 16ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் கட்டயாமாக நடத்தப்பட வேண்டும் உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதும் ஜனாதிபதி இந்த விடயத்தை உறுதிப்படுத்தி இருந்தார். அதனால் இந்தவருடம் ஜனாதிபதி  தேர்தல் இடம்பெறுவது உறுதி,  அதில் மாற்றம் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன்...

2024-06-17 17:59:41
news-image

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2024-06-17 17:59:10
news-image

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த...

2024-06-17 17:28:31
news-image

யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை...

2024-06-17 17:23:48
news-image

பதியத்தலாவயில் வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு...

2024-06-17 17:23:24
news-image

நீர் குழாயில் வெடிப்பு : நள்ளிரவுக்குள்...

2024-06-17 16:36:53
news-image

75 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கொழும்பில்...

2024-06-17 16:44:36
news-image

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புதிய ரயில்...

2024-06-17 17:19:50
news-image

மாத்தளையில் நாளை நீர் வெட்டு

2024-06-17 15:49:35
news-image

களுத்துறையில் இளைஞர் கடத்தல் ; பொலிஸார்...

2024-06-17 15:25:46
news-image

சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி...

2024-06-17 15:42:54
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களுடைய பூர்வீக காணிகள்...

2024-06-17 14:46:36