(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி தேர்தலை இன்னும் இரண்டாண்டுகளுக்கு பிற்போடும் யோசனைக்கு நாட்டு மக்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பொதுச்செயலாளர் ஊடாக ஜனநாயகத்துக்கு எதிரான கூற்றை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும், பாராளுமன்றத்தின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கும் நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் தனது திட்டங்களை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
அவ்வாறாயின் அவர் தேர்தலுக்கு முகம் கொடுக்கலாம். அதை விடுத்து தேர்தலை பிற்போடுவதற்கு முறையற்ற வகையில் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி , பொதுத் தேர்தல்களை நடத்தாது இன்னும் இரண்டாண்டுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்வதற்கு மக்கள் வாக்கெடுப்பை நடத்தும் யோசனைக்கு மக்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தனது கட்சியின் செயலாளர் ஊடாக இவ்வாறான கூற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டார் அதன் விளைவு மிக மோசமானதாக அமைந்தது.மாமன் வழியில் மருமகன் செல்கிறாரா என்பதை ஆராய வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும், பாராளுமன்றத்தின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கும் நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள். ஜனாதிபதிக்கும், இந்த பாராளுமன்றத்துக்கும் மக்களாணை என்பதொன்று கிடையாது. ஆகவே தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்று மக்கள் கோருகிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதும், போட்டியிடாமல் இருப்பதும் ஜனாதிபதியின் தனிப்பட்ட தீர்மானம்.அவரது தனிப்பட்ட தீர்மானங்களை நாட்டு மக்கள் ஆராயவில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்பட்டால் நாட்டில் மீண்டும் போராட்டம் தோற்றம் பெறும். வரலாற்றில் தான் தவறான எடுத்துக்காட்டாக அடையாளப்படுத்தப்படுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM