வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை நீலகிரி ஸ்தூபியின் அகல்வாராய்ச்சி நடவடிக்கைகளின்போது தொல்பொருள் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட புத்தபிரானின் புனித சின்னங்கள் ஏப்ரல் மாதம் 01, 02 ஆம் திகதிகளில் ரிதிபெதிஎல்ல, கிரிதிகல்ல, வேரகல, கலாபு ரஜமகா விகாரையில் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளன.

முற்பகல் 9.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இந்த புனித சின்னங்கள் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளதுடன், மேற்படி விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட தேரர்களால் இந்த புனித நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.