தலைமறைவாக இருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மதுரங்குளிய கந்த தொடுவா பகுதியில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார் .
இவர் 2010ஆம் ஆண்டு பெண்ணொருவரை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முந்தலம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், புத்தளம் மேல் நீதிமன்றம் இந்த சந்தேக நபருக்கு 2015ஆம் ஆண்டு 15 வருடச் சிறைத்தண்டனை விதித்துத் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, இந்த நபர் சுமார் 9 ஆண்டுகளாகச் சட்டவிரோதமாக வெளிநாட்டில் தங்கியிருந்துள்ளதுடன் பின்னர் நாடு திரும்பி கொழும்பு பகுதியில் தலைமறைவாகியுள்ளார் .
இந்நிலையில் இவர் மந்துரங்குளி பகுதிக்கு வந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM