பாகிஸ்தானில், தெற்காசிய அரசியலுக்கான புதிய பாடத்திட்டத்தை AI பட்டியலிடுகிறது

Published By: Digital Desk 3

29 May, 2024 | 02:45 PM
image

எழுதியவர் - நெவிந்தி ஜெயவர்தன மற்றும் தில்ஷான் படதுவாரச்சியுடன் இணைந்து உதித தேவப்ரிய 

பெப்ரவரி 8 ஆம் திகதி பாகிஸ்தானியர்கள் தேர்தலுக்கு முகம் கொடுத்த நேரத்தில், இம்ரான் கான் மற்றைய தவறுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்தார். ஒரு வாரத்திற்கு முன்பு, நாட்டின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சி தலைவரான கான், 10 ஆண்டுகள் பதவியில் இருப்பதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) வெகுஜன வற்புறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் உட்பட்டதுடன், அதன் மத்திய அலுவலகங்கள் பொலிசாரால் சீல் வைக்கப்பட்டன.

கட்சிக்கு எதிராகவும் அதன் தலைவருக்கு எதிராகவும் முரண்பாடுகள் கடுமையாக இருந்தன. ஆனாலும் கானால் அவற்றை எதிர்க்க முடிந்தது. வாக்கு மோசடி மற்றும் இராணுவ தலையீடு போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் மற்றும் அனைத்து பந்தயங்களும் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த போதிலும், PTI 93 இடங்களை வென்றது. ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PMLN) 75 இடங்களிலும், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கானின் வெற்றி குறிப்பிடத்தக்கது என்பதுடன், பங்களாதேஷுக்கு முற்றிலும் மாறுபட்டது, அங்கு பதவியேற்றவர் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பதவியேற்றார், மற்றும் இந்தியாவில், ஏப்ரல் மாதத்தில் பா.ஜ.க பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெற்றிக்குப் பிறகு என்ன நடந்தது என்பதுதான் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனவரியில், ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம், தனது நிகழ்நிலை தேர்தல் பிரச்சாரத்தை நாசப்படுத்த இணையத் தடையை அமுல்படுத்தியதாக PTI குற்றம் சாட்டியது. PTI பேரணிகளை நடத்துவதை பொலிசார் தடை செய்ததாலும், அரசாங்கம் இணைய முடக்கங்களை விதித்ததாலும், கானின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களை, பிரதானமாக டிக்டோக்கை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவரது வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, கானின் ஆதரவாளர்கள் அவரது வெற்றி உரையை நிகழ்நிலையில் வெளியிட்டனர். ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட காணொளியானது சற்றே குழப்பமான நிலையிலான கானுடன் ஆரம்பிக்கின்றது. அவர் தனது தனித்துவமான சத்ரி மற்றும் குர்தாவை அணிந்துகொண்டு, தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, கட்டுப்பாடுகளை வெற்றி கொண்டமைக்காக அவர்களை வாழ்த்துகிறார், பொதுவாக பாகிஸ்தானியர்களிடம் "உங்கள் வாக்கைப் பாதுகாருங்கள்" என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

எல்லா வகையிலும், இது ஒரு சாதாரண வெற்றி உரையாகவே தெரிகிறது. ஆனால் அது உண்மையில்லை. காணொளியில் கான் சில நொடிகள் இருக்கிறார். ஒரு கட்டத்திற்குப் பிறகு, வார்த்தைகள் அவரது உதடுகளின் அசைவுடன் பொருந்தவில்லை. மேலும் குரலில்  வழமைக்கு மாறாக ஏதோ தவறாகத் தெரிகிறது.

அது ஏனென்றால் அது கானின் குரல் அல்ல என்பதாலாகும். நீங்கள் பார்ப்பது அல்லது கேட்பது தெற்காசியாவில் AI மூலம் உருவாக்கப்பட்ட முதலாவது அரசியல் வெற்றி உரையாகும்.

PTI AI ஐ நாடியது இதுவே முதல் முறை அல்ல. கடந்த டிசம்பரில் கட்சி இதேபோன்ற காணொளியை ஓர் மெய்நிகர் பேரணியில் பயன்படுத்தியது. AI உருவாக்கிய படத்தைக் காட்டும் காணொளி, YouTube இல் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அதற்குள் கானை விளம்பரப்படுத்தவோ அல்லது அவரது படங்களைப் பயன்படுத்தவோ பிரதான ஊடகங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. ஒன்றன் பின் ஒன்றாக குற்றச்சாட்டுகளால் தாக்கப்பட்ட அவர், எந்தவொரு ஊடக தளத்திலிருந்தும் தடை செய்யப்பட்டார்.

இதற்கு எதிராக PTI கடுமையான போராட்டத்தை நடாத்தியது. இராணுவம் வரலாற்று ரீதியாக சிவில் விவகாரங்களில் தலையிட்டுள்ள ஒரு நாட்டில், ஆளும் கட்சிகளுக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்தாலும், முரண்பாடுகள் அதற்கு சாதகமாக இல்லை. ஆனால், அது அரசாங்கத்தின் பக்கம் திரும்பியது. அது தெற்காசியாவிலேயே மிகவும் புத்தாக்கமான தேர்தல் உத்தியாக பொறியியலின் மூலமாக அதனை மேற்கொண்டது.

அதன் செயற்பாடு எளிமையானது. கான் தனது சட்’டத்தரணிகளுடன் பேசும் போது, சில கருப்பொருள்களை குறிப்பிட்டு குறிப்புகளை அனுப்புவார். இவை பின்னர் அவரது ஆதரவாளர்களுக்கு அனுப்பப்படுவதுடன், அவர்கள் டிக்டோக்கில் டிஜிட்டல் தேர்தல் பேரணிகளில் AI உரைகளை விரைவாக உருவாக்குவதற்கு அவற்றைப் பயன்படுத்துவார்கள். அதே நேரத்தில், கானின் முகநூல் பக்கத்தில், தேர்தல் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் chatbot இனை கட்சி திறந்தது. இந்த இலகுவான ஆனால் வினைத்திறனான வழிவகைகள் மூலம், PTI இனால் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பாதாளத்திற்குச் செல்லத் தேவையில்லாமல் முறியடிக்க முடிந்தது.

AI ஆதிக்கம் செலுத்தும் அரசியல் மற்றும் பிரச்சாரங்களுக்கு தெற்காசியா நிச்சயமாக புதியதல்ல. உதாரணமாக, நரேந்திர மோடியின் பா.ஜ.க சில காலமாக இதனைப் பயன்படுத்துகிறது.

ஆனால் AI எப்போதும் ஆளும் கட்சிகளால் பயன்படுத்தப்படுவதில்லை. அதுவும் தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. உதாரணமாக, deepfake தெற்காசியாவில் புதிய குமுறலாக மாறிவிட்டன. ஒரு பயங்கரவாதத் தலைவரின் மகள் முதல் மிகவும் விரும்பப்படும் தென்னிந்திய அரசியல் பிரபலம் வரை, இறந்தவர்களை உயிர்த்தெழுப்புவதற்கு deepfakes பயன்படுத்தப்படுகின்றன. கான் இதை அடுத்த தர்க்கரீதியான படிநிலையான சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உயிர்த்தெழுப்பவும், மீள சட்டப்பூர்வமாக்கவும் AI ஐப் பயன்படுத்துதல் என்பதற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அப்படியானால், தெற்காசிய அரசியலின் எதிர்காலத்தில் இதன் தாக்கங்கள் என்ன? முதலாவதாக, இது தெற்காசியாவின் பாரம்பரிய மென்மையான சர்வாதிகார அரசியல் மாதிரியானது சமூக ஊடகங்களுக்கும் AI க்கும் பொருத்தமற்றது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. பாகிஸ்தானின் விடயத்தில், அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான வலுவான உறவால் கூட எதிர்க்கட்சிகள் டிக்டோக் மற்றும் முகநூலில் செயற்படுவதைத் தடுக்க முடியவில்லை. PTI ஐ இலக்கு வைத்து அரசாங்கம் இணைய முடக்கத்தை விதித்தது. ஆனால், அது கட்சியை வேறு வழிவகைகளுக்கும் தளங்களுக்கும் தள்ளியதை தான் விளைவாக்கியது.

இரண்டாவதாக, இது ஓர் முக்கிய தலைமுறை மாற்றத்தை சுட்டிக் காட்டுகின்றது. ஷெரீப் அரசாங்கம் PTI ஐ தடுப்புப்பட்டியலில் சேர்க்க தன்னிடம் இருந்த அனைத்து கருவிகளையும் பயன்படுத்தியது, ஆனால் அது இளைஞர்களைக் கணக்கில் கொள்ளாமல் அதனை செய்தது, அவர்களில் பெரும்பாலானோர் கானுக்கு வாக்களித்ததுடன் அது பாகிஸ்தானின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் ஆச்சரியத்தைப் பெற அவருக்கு உதவியது. மற்ற தெற்காசிய நாடுகளை நினைவூட்டும் வகையில், இளைஞர்கள் பிரதான ஊடகங்களை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதுடன் பல தசாப்தங்களாக முக்கிய ஊடகங்கள் வலுப்படுத்தி வரும் ஆளுமை வழிபாட்டு முறைகள் மற்றும் வம்ச அரசியலை நிராகரித்துள்ளனர்.

இத்தகைய மாற்றங்களின் வெளிச்சத்தில், இது ஊடகமல்ல, வைக்கப்படுகின்ற செய்தி முக்கியமானதாகும். கானும் ஷெரீப்பும் AI மற்றும் சமூக ஊடகங்களுக்கு சமமான அணுகலைக் கொண்டிருந்தனர். ஆயினும்கூட, ஷெரீஃப் ஓர் மிகைப்படுத்தப்பட்ட, சுயநலம் கொண்ட அகங்காரவாதியாகக் காணப்பட்ட அதே நேரத்தில் கான் மிகவும் முற்போக்கான வேட்பாளராக, நாடு மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் அக்கறை கொண்ட ஒரு நபராவார். எளிமையாகச் சொன்னால், கான் AI-ஐப் பயன்படுத்தியது அவரது வெற்றியைப் பாதுகாக்க உதவியது மட்டுமல்ல; அவர் பேசியதும் அதுதான். ஒரு ஆய்வாளர் மிகவும் பொருத்தமாக கூறியது போல், "பழைய நாடக புத்தகம் இனி செய்யாது" என்பது தான்.

மூன்றாவதாக, இது ஜனநாயகம் இனி பாரம்பரிய ஊடகங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும், பாரம்பரிய ஊடகங்களுக்கான அணுகல் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்காது என்பதையும் காட்டுகிறது. AI, அந்த வகையில், ஓர் அரசியல் சமநிலைப்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது. இந்த பிராந்தியத்திலும், உலகிலும், ஒரு எதிர்க்கட்சி தேர்தல் வெற்றியைப் பெறுவதற்கு AI ஐப் பயன்படுத்துவது இதுவே முதன்முறையாகும். பாகிஸ்தானியர்கள் நிறுவன அரசியலால் சோர்வாக இருந்தமையால், இந்த அமைப்பில் அரசாங்கம் மற்றும் பூட்டோ தலைமையிலான PPP ஆகிய இரண்டும் வேரூன்றியிருந்த வம்ச வழிபாட்டு முறைகளால் சோர்வடைந்துவிட்டன.

இது ஓர் முக்கியமான விடயமாகும். பிராந்தியத்தில் பொருளாதார மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில், தெற்காசிய மக்கள் ஆட்சியிலுள்ள கட்சிகள் மீது வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். ஒரு ஜனநாயக கட்டமைப்பிற்குள் "அமைப்பு" மீதான கோபத்தை எவ்வாறு வைத்திருப்பது என்பது எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக உள்ளது. பாகிஸ்தான் தேர்தல்கள் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்: ஷெரீப் அரசாங்கம் PTIயின் சட்டத்தகமையை நீக்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தாலும், PTI தேர்தல் அரசியலில் நம்பிக்கையை வலுப்படுத்தும் அதே வேளையில் அதை உயர்த்துவதற்கு புதிய உத்திகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பயன்படுத்தியது. 

வெளிப்படையான காரணங்களுக்காக, இத்தகைய உத்திகள் தெற்காசியாவின் பெரும்பகுதியைப் போலவே, தேர்தல் அரசியலின் கலாச்சாரத்தைக் கொண்ட நாடுகளில் மற்றும் மென்மையான-அதிகாரப்பூர்வ அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் கூட சிறப்பாகச் செயற்படுகின்றன. அவை கடுமையான சர்வாதிகார அமைப்புகளில் வேலை செய்ய மாட்டாது, நிச்சயமாக மியான்மர் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதித்த நாடுகளில் வேலை செய்யாது. தணிக்கை, பாகிஸ்தான் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வகை தணிக்கை கூட, டிக்டோக் மற்றும் AI அல்லது deepfakesகளை நாடுவதில் இருந்து எதிர்க் கட்சிகளைத் தடுக்க சிறிதளவே செயற்படுமென்பதுடன், முழுமையான தடைகள் அத்தகைய தளங்களை ப

இது நான்காவது மற்றும் மிக முக்கியமான விடயத்திற்கு நம்மைக் கொண்டுவருகிறது. அரசியல் வட்டாரம் முழுவதும் தவறான தகவல், பிழையான தகவல் மற்றும் வெறுப்பு பேச்சுக்கு AI எவ்வாறு வழிவகுக்கும் என்பது பற்றிய கரிசனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை போன்ற நாடுகள் இதை இன்னும் அனுபவிக்காத நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் கடுமையாக போராடி வருகின்றன.

PTIயின் உத்திகள் எதிர்பார்த்த பலனை வழங்கின. அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட ஒரு எதிர்க்கட்சிக்கான பயனை அவர்கள் அடைந்தனர். ஆயினும்கூட, நீண்ட காலத்திற்கு, AI இரட்டை முனைகள் கொண்ட வாளாக இருக்கலாம். இது ஊழல் மற்றும் சர்வாதிகார அரசாங்கத்தை முறியடிக்க PTI க்கு உதவியிருக்கலாம் என்றாலும், ஊழல் மற்றும் சர்வாதிகார அரசாங்கங்கள் தாங்களாகவே அதன் புத்தகத்திலிருந்து ஒரு இதழை எடுத்துக்கொண்டு வேறு இடத்தில் அதே விளையாட்டை விளையாடலாம். AI தொழில்நுட்பங்கள் பல அரசியல் புயல்களை தோற்றுவித்திருக்கும் நேரத்தில், இது வலிதான கரிசனமாகத் தெரிகிறது.

இந்த அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ளது. AI ஜனநாயக அரசியலை குறிப்பாக தெற்காசியா போன்ற பிளவுபடுத்தும் அரசியல் சூழல்களில் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே வேளையில், AI தளங்கள் அதற்கு அளிக்கப்படும் தரவிலேயே முற்றிலுமாக தங்கியுள்ளன. அவை பிரதான ஊடகங்கள் உட்பட பிற துறைகளில் உள்ள முன்னேற்றங்களையும் சார்ந்துள்ளது. தெற்காசியா, அல்லது தென்கிழக்கு ஆசியா கூட, தேர்தல் அரசியலுக்கு ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், AI இந்த விடயங்களில் போதுமான அளவு முன்னேறவில்லை. மற்ற நாடுகளில், குறிப்பாக மேற்கு நாடுகளில் நிலைமை வேறுபட்டதாகும்.

இது பிரதான அரசியலை சீர்குலைக்கும் AI இன் திறனைக் குறைத்து மதிப்பிடுவதல்ல. இம்ரான் கானின் வெற்றி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அரசாங்கத்தின் காப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும், எதிர்ப்பாளர்களை அணிதிரட்டவும், வலுவூட்டவும் அவை பயன்படுத்தப்படலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆபத்து ஊடகத்தில் அல்லாது செய்தியிலேயே உள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான அரசியலை ஊக்குவிப்பதில் AI ஒரு பாரிய வகிபங்கை வகிக்க முடியும். ஆனால் ஆர்ஜென்டினாவில் சமீபத்திய தேர்தல்கள் காட்டுவது போல், இது தவறான தகவலை பரப்பவும் பயன்படுத்தப்படலாம். தெற்காசியா அந்த நிலைக்கு வந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். ஒரு நிலையில், கானின் வெற்றி பிராந்தியத்தை அந்த திசையில் ஒரு சிறிய காலடியை எடுத்து வைத்தது போல தோன்றுகிறது. 

உதித தேவப்பிரிய Factum இல் சர்வதேச உறவுகள் தொடர்பான பிரதம பகுப்பாய்வாளர் என்பதுடன் அவரை uditha@factum.lk எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

நெவிந்தி ஜெயவர்தன சமீபத்தில் பிலடெல்பியாவில் உள்ள ட்ரெக்சல் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய கற்கையில் BA பட்டம் பெற்றார். அவர் அபிவிருத்தித் துறையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவராவார். அவர் குற்றவியல் நீதியியல் அமைப்பில் பெண்களுக்காக பரப்புரையாற்றுதல் மற்றும் டிஜிட்டல் முறையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு  செயற்திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.

டில்ஷான் படதுவாரச்சி அவுஸ்திரேலியாவின் ஜீலாங், டீக்கின் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் PhD மாணவராவார். அவரது ஆராய்ச்சிப் பணி முதன்மையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் கையாள்கையின் தன்னாட்சி கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துகிறது.

Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Factum விசேட கண்ணோட்டம்: தேர்தலுக்குச் செல்லும்...

2024-06-13 10:04:03
news-image

Factum கண்ணோட்டம்: ரைசியின் மரணத்தின் மூலம்...

2024-06-12 18:03:09
news-image

இலங்கை ஒருகாலத்தில் செய்தது போல இஸ்ரேல்...

2024-06-12 10:58:31
news-image

தேர்தல் நிச்சயமற்ற தன்மையே பொருளாதார மீட்சியை...

2024-06-11 15:21:50
news-image

தமிழ் பொது வேட்பாளர் குறித்த கரிசனைகளை...

2024-06-10 18:29:19
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழ் கட்சிகளுக்குள்...

2024-06-10 18:24:08
news-image

அரசாங்கத்தின் மறைமுக எச்சரிக்கையை உணரவில்லையா கம்பனிகள்?...

2024-06-10 17:59:48
news-image

இடம்பெயர்ந்து வரும் பாலஸ்தீனியர்கள் போல வந்து...

2024-06-10 16:19:25
news-image

இரத்தினபுரி மாவட்ட தமிழர் அரசியல்…! :  ...

2024-06-10 10:50:01
news-image

ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

2024-06-10 10:38:40
news-image

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த தமிழ்...

2024-06-10 10:27:47
news-image

வெளியிடப்படாத நவாஸ் ஆணைக்குழு அறிக்கை ஏற்புடைய...

2024-06-09 17:31:23