மாலபே, பொரலஸ்கமுவ, மாகும்புர ஆகிய நடுத்தர வர்க்க வீட்டுத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 7

29 May, 2024 | 04:19 PM
image

கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட மாலப்பே, பொரலஸ்கமுவ மற்றும் மாகும்புர ஆகிய மத்தியதர வர்க்க வீட்டுத் திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

இந்த மூன்று வீட்டுத் திட்டங்களும் 2021 பெப்ரவரியில் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்டது. மாலப்பே வீட்டுத்திட்டத்திற்காக ரூ. மில். 3148.80 ஒதுக்கப்பட்டது. இதில் 256 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. பொரலஸ்கமுவ வீடமைப்பு திட்டத்திற்கு 120 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. மில். 1476 ஆகும் மாகும்புர வீடமைப்புத் திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட தொகை ரூ. மில். 3859 மற்றும் அங்கு நிர்மாணிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை 314 ஆகும்.

மாலப்பேயில் உள்ள வீட்டுத் திட்டம் மார்ச் 2023 முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்கனவே அதன் நிர்மாணத்திற்காக 1539 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. பொரலஸ்கமுவ மற்றும் மாகும்புர ஆகிய இரண்டு திட்டங்களின் வேலைகளும் 2022 ஜூலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில், இந்த இரண்டு திட்டங்களுக்காகவும் முறையே 369 மில்லியன் மற்றும் 1378 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது.

இந்தத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒரு தொழில்நுட்பக் குழுவையும் அமைச்சு நியமித்தது. அந்த  தொழில்நுட்பக் குழு அறிக்கை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நிலையான கொள்முதல் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி இந்த திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, 03 வேலைத் திட்டங்களும் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன்...

2024-06-17 17:59:41
news-image

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2024-06-17 17:59:10
news-image

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த...

2024-06-17 17:28:31
news-image

யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை...

2024-06-17 17:23:48
news-image

பதியத்தலாவயில் வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு...

2024-06-17 17:23:24
news-image

நீர் குழாயில் வெடிப்பு : நள்ளிரவுக்குள்...

2024-06-17 16:36:53
news-image

75 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கொழும்பில்...

2024-06-17 16:44:36
news-image

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புதிய ரயில்...

2024-06-17 17:19:50
news-image

மாத்தளையில் நாளை நீர் வெட்டு

2024-06-17 15:49:35
news-image

களுத்துறையில் இளைஞர் கடத்தல் ; பொலிஸார்...

2024-06-17 15:25:46
news-image

சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி...

2024-06-17 15:42:54
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களுடைய பூர்வீக காணிகள்...

2024-06-17 14:46:36