மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்றவர் காட்டு யானை தாக்கி பலி !

29 May, 2024 | 04:18 PM
image

அனுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தில்லன்கல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

நேரியகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மனைவியுடன் வயலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இவ்வாறு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது இவரது மனைவி எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதஸ்தலத்தில் சமய...

2024-07-22 21:31:10
news-image

22 ஆவது திருத்தம் ஜனாதிபதி தேர்தல்...

2024-07-22 17:15:15
news-image

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 455 697...

2024-07-22 19:25:35
news-image

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் வரிப்பணத்தை...

2024-07-22 17:18:35
news-image

சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இணையுமாறு வெளிநாட்டு...

2024-07-22 19:10:14
news-image

"தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" : புரிந்துணர்வு...

2024-07-22 18:38:46
news-image

சுங்கத் திணைக்கள நிர்வாக அதிகாரி மீது...

2024-07-22 17:23:24
news-image

குருணாகலில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு...

2024-07-22 20:29:26
news-image

ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் திணைக்களம் தயார்...

2024-07-22 17:17:28
news-image

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் - அநுரகுமார...

2024-07-22 17:20:22
news-image

புத்தளத்தில் சட்டவிரோத பீடி இலைகளுடன் ஒருவர்...

2024-07-22 17:11:45
news-image

மஸ்கெலியாவில் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில்...

2024-07-22 17:20:09