இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் தனிப்பட்ட விபரங்களை டுவிட்டரில் பிரச்சாரம் செய்தமைக்கு டோனியின் மனைவி சக்ஷி சிங் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி இந்திய அரசுக்கு சொந்தமான டுவிட்டர் தளத்தில் டோனியின் ஆதார் கார்டு தொடர்பான விடயங்களை டுவிட்டரில் பதிவுசெய்தது.

இதனை இந்திய அமைச்சர்களில் ஒருவரும் பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த டோனியின் மனைவி ஆதார் கார்டு விடயம் ஏன் டுவிட்டரில் பதிவிடப்பட்டது. டோனியின் தனிப்பட்ட விடயம் ஒன்றும் இருக்ககூடாதா?, இவ்வாறு தனிப்பட்ட விடயங்களை பதிவிடுவதால் தான் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பதிவை டோனியின் மனைவி தற்போது நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.